இயற்கைக்கு மேம்பட்டவைகள் THE SUPERNATURAL 56-01-29 1. சகோதரன் ரோஜர்ஸ், உங்களுக்கு நன்றி - நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி. நண்பர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு நன்றி. சற்று நேரம் நீங்கள் அமரலாம். உங்களுடைய வரவேற்பை உணரும் போது, அது எப்போதுமே எனக்கு நல்ல உணர்வுகளைத் தருகிறது. அது ஒருவகையான... உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் கென்டக்கியைச் சேர்ந்தவன். நீங்கள் என்னை வரவேற்பதை நான் - நான் கேட்க விரும்புகிறேன். இந்தப் பட்டினத்தில் என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களாகிய உங்கள் மத்தியில் எனக்கு அவ்வளவு சிறந்த வரவேற்பு கிடைத்தது. நிச்சயமாக, உங்களுக்கு நான் மிகுந்த நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும் என்று உணருகிறேன். இப்படிப்பட்ட வரவேற்பை சகோதரன் ரோஜர்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை எப்போதும் நேசிக்கிறேன். அவர் எனக்கு ஒரு மிக அற்புதமான சிறிய சகோதரனாக இருந்து வருகிறார். நிச்சயமாக, ஓவன்ஸ்போரோ என்னும் இவ்விடத்தில் அவ்விதமாக தேவனுடைய கரங்களில் ஒரு உண்மையான கருவியாக இருந்து வருகிறார். 2. புதியதாக நீங்கள் கட்டவிருக்கும் ஒரு சபையை - அது அமையப்போகும் அந்தத் தெருவை நான் சற்று பார்த்தேன். அல்லது வேறு ஏதோ ஒன்றைக் கட்டப் போகிறீர்கள். அதைக் காலை உணவுக்கான மேஜையில் அமர்ந்திருக்கும் போது அவர் என்னிடம் சொன்னார். அவ்விதமாக நீங்கள் - நீங்கள் முன்னேறிச் செல்வதைப் பார்க்கும் போது அது மிக அருமையானதாய் இருக்கிறது. நீங்கள் சரியான காரியத்தைச் செய்கிறீர்கள் என்பதை அது காட்டுகிறது. தேவனுடைய ஜனங்களுக்கு சிறந்த ஒன்றைக் கொடுப்பதற்கு, தேவனுடைய ஊழியக்காரர் முயற்சி செய்கிறார். அப்படிப்பட்ட மேய்ப்பரை ஒவ்வொரு சபையும் பாராட்டும். உங்களுடைய நிதிகள், தசமபாகங்கள், உங்களுடைய காணிக்கைகள் இன்னுமாக நீங்கள் செய்கிற எல்லாமும் எவ்விதமாக பயன்படுகிறது என்பதைக் காண்கிறீர்கள். நீங்கள் தனக்காக அல்ல, ஆனால் உங்களுக்காக, ஒரு நல்ல ஸ்தலத்தைக் ஆயத்தம் பண்ணுவதற்காக, தேவனுடைய இராஜ்ஜியத்தை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக, தேவனுடைய இராஜ்ஜியத் திற்கு நேரடியாகச் செல்கிறவராய் இருக்கிறார். அவர் - அவர் தன் ஆடுகளை மந்தையை சிந்தையில் கொண்டவராக இருக்கிறார் - மேய்ப்பர் எப்போதும் அப்படியே இருப்பார். 3. பாலஸ்தீனாவில் இருக்கும் போது, அல்லது இன்னும் சரியாக நாம் சொல்வோமானால் நாம் கீழ்த்திசை நாடுகளுக்குச் செல்வோமானால், பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அந்த உவமையைக் குறித்து நான் அடிக்கடி வியப்படைவதுண்டு. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள உவமைகள் எல்லாம் எவ்வாறு உண்மையிலேயே அர்த்தம் கொள்கிறது, பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது என்பதைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் அநேகமாக பழைமையான மேற்கத்திய நாடுகளுக்குச் செல்ல வேண்டும். ஒருமுறை நான் மேற்கத்திய ஊழியக்காரர்களோடு அமர்ந்திருந்தேன். அவர்கள் எல்லோரும் ஒரு காரியத்தைக் குறித்து குழப்பமடைந்தவர்களாயிருந்தனர். "அவர்கள் இதற்கு என்ன அர்த்தம் கொள்கிறார்கள்-?" "இது என்ன பொருளைக் குறிக்கிறது-?" "அது என்ன பொருளைக் குறிக்கிறது-?" என்றெல்லாம் சிந்தித்து குழப்பமுற்றவர்களாயிருந்தனர். நீங்கள் எப்போதாவது கிழக்கத்திய நாடுகளுக்குச் செல்வீர்கள் என்றால், அவர்களின் மாறாத பழக்க வழக்கங்களைப் பார்க்கலாம். நல்லது, அங்கே பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து அதிக அதிகமாய்த் தெரிந்து கொள்ளலாம். நான் கிழக்குக்குச் சென்ற பின், அது எனக்கு புதிய புத்தகமாயிற்று. உதாரணமாக, இயேசு சொன்னது போல, நான் பரிசுத்த யோவான் 10-ம் அதிகாரம் என நம்புகிறேன். நான் அவ்விதமாக எண்ணுகிறேன். "நானே ஆட்டுத்தொழுவத்திற்கு வாசலாக இருக்கிறேன். நானே ஆட்டுத்தொழுவத்திற்கு வாயிலாக இருக்கிறேன்." அது என்ன பொருள்படும் என்று அடிக்கடி நான் வியந்ததுண்டு. அவர் வாசலில் நின்று, வருகிற அத்தனை ஜனங்களையும் ஏற்றுக் கொள்கிறார். அல்லது, இன்னொரு விதமாகவும் நான் சிந்தித்தேன். மேய்ப்பர் வாசலில் நின்று வருகிற ஒவ்வொரு ஆடுகளையும் இதைப்போன்று எண்ணுகிறார். அவ்விதமாக நான் வழக்கமாக நினைப்பதுண்டு. ஒருவேளை உங்களில் அனேகர், என்னுடைய சகோதரர்கள், குருமார்கள் அத்தனை பேரும், நான் எண்ணிய விதமாகவே, நீங்களும் நினைத்து இருக்கக்கூடும். 4. ஆனால் ஒரு முறை அங்கே இருப்பீர்களானால், அங்கே ஒரு வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள். அது, ஆடுகளை எண்ணுவதல்ல. ஆனால் மேய்ப்பன் தானே வாசலாக மாறி விடுவார். அங்கே சுற்றிலும் அடைக்கப்பட்ட ஒரு தொழுவம் இருக்கும். அது பாதுகாப்பான இடமாகவும் இருக்கும். எல்லா ஆடுகளையும் அங்கே ஓட்டிக் கொண்டு வந்து, அதற்குள் பிரவேசிக்கச் செய்வான். பின்பு அவன் அங்கே சென்று வாசலில் குறுக்காகப் படுத்துக் கொள்வான். அங்கே ஆடு அல்லது ஓநாய்கள் மேய்ப்பனைக் கடக்காமல் உள்ளே பிரவேசிக்க முடியாது. அல்லது ஆடுகளும் வெளியே செல்ல முடியாது. "இது அதிசயமாக இல்லையா-?" என்று நான் எண்ணிக் கொண்டேன். பாருங்கள், அவர் ஆட்டுத்தொழுவத்திற்கு வாசலாக இருக்கிறார். பாருங்கள்-? மேய்ப்பர் அனுமதித்தாலொழிய, ஆட்டு மந்தையிடத்தில் எதுவும் வர முடியாது. நாம் வாசலில் நிற்கும் அந்த மேய்ப்பரைப் பெற்றிருப்போமானால், அது நமக்கு எவ்வளவு பாதுகாப்பாகவும் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேய்ப்பர் அனுமதித்தால் ஓழிய, சாத்தான் உன்னைத் தொடமுடியாது. அது என்னவாக இருந்த போதிலும் சகலமும் நன்மைக்கு ஏதுவானதே. நான் என்ன பொருள் கொண்டுள்ளேன் என்று பார்க்க முடிகிறதா-?... அதாவது அவர் அவ்வாறு கூறும் போது... அந்த மேய்ப்பன். நான் மறுபடியும் கவனித்தேன்.... இந்த தேசத்தில் மேய்ப்பன் என்றால், அவ்வளவு பொருள்பட மாட்டார். ஏன், அது பழங்காலச் சொல். ஆனால் கிழக்கத்திய நாடுகளில் மேய்ப்பன் என்றால் அவ்வளவு முக்கியம் வாய்ந்த சொல்லாகும். ஓ, என்னே. அந்த ஆட்டுமந்தை ஜனங்கள், தங்களுடைய ஆட்டு மந்தை மூலமாகவே ஜீவியம் நடத்துவார்கள். மேய்ப்பன் ஆடுகளின் மீது அக்கறை உள்ளவனாக இருந்து பொறுப்பெடுக்கிறான். 5. ஒரு முறை அந்த தேசத்தினூடாகச் சென்ற போது தூர கிழக்கு தேசத்தில், ஒரு சிறு காரியத்தைக் கவனித்தேன். ஒரு சமயம் அந்த தேசத்தை உருவக் கடந்து செல்லும் போது, இந்தியாவில் அவர்கள் எவ்வாறு ஒரு மேய்ப்பன், தன்னுடைய ஆடுகளைக் கொண்டு வருகிறான் என்று கவனித்தேன். அவன்... அங்கே அந்த உவமையை நினைவு கூர்ந்தேன். தெருக்களின் வழியாக நடந்து வரும் போது அங்கு ஒரு சிறிய குறுகலான தெரு இருந்தது. "என் ஆடுகள் என் சத்தத்தை அறியும். ஒரு அந்நியனை அவைகள் பின்பற்றிச் செல்லாது". இப்போது, அந்த மேய்ப்பனுடைய வழிநடத்துதலின் கீழ், அந்த ஆடு பிறந்தது. அந்த சத்தத்தை அது கற்றுக் கொள்கிறது; மற்ற எந்தவொருவருடைய சத்தத்திற்கும் அது செவி கொடுக்காது. மேய்ப்பனுடைய சத்தத்தை அது கற்றுக் கொள்கிறது. வேறொரு மேய்ப்பன் அதை அழைக்கலாம், அவர்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்வார்கள். ஆனால் ஆடு மேய்ப்பனை அடையாளம் கண்டு கொள்வதற்கு, மேய்ப்பனைக் குறித்து ஏதோ ஒரு சிறு காரியம் உண்டு. பாருங்கள், தேவனுடைய ஆடுகளுக்கும் அதே வழி தான் உண்டு. அந்நிய சத்தம் அவைகளுக்கு சரியாக தொனிக்காது. அவைகள் அங்கு போகாது அவ்வளவு தான். ஆடு சோதிக்கப்படக் கூடுமானால், அவன் தவறான மேய்ப்பன் என்று அது கண்டு கொள்ளும் போது, அவன் பின்னால் செல்வதிலிருந்து திரும்பிவிடும். 6. ஆடு மேய்ப்பனின் மாதிரியை எவ்வாறு பின்பற்றுகிறது என நான் கவனித்தேன். தெருக்களின் வழியாக நடந்து வரும் போது அங்கு ஒரு சிறிய குறுகலான தெரு இருந்தது. குதிரை ரதங்களை பயன்படுத்திய அக்காலத்தில், கிழக்கத்திய நாடுகளில் தெருக்கள் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ரதங்களைப் பெற்றிருந்த போது, அந்தத் தெருக்களின் வழியாக ரதங்களையும், குதிரைகளையும் ஓட்டிச் சென்றனர். அது மிகவும் ஒடுக்கமானதாக இருந்தது. எப்போதாவது நீங்கள் அகலமான விசாலமான தெருவைப் பார்க்க முடியும். அப்படிப்பட்ட தெருவைக் காண்பது மிகவும் அரிது. அந்த அகலத்திற்கு இரு புறமும் தூண்கள் நடப்பட்டிருக்கும். ஓ, சில நேரங்களில் வீதிகள் பன்னிரண்டு அடி அகலமாகக் கூட இருக்கலாம். அவைகளில் அனேகம்... நார்வே தேசத்தில் ஓஸ்லோ என்னுமிடத்தில், பழைய பட்டினங்களில், தெருக்களின் அகலம் ஏறக்குறைய 8-டு அடி அகலம் கொண்டதாக மட்டுமே இருக்கும். அவை 15-நூற்றாண்டு பழைமை உடையவை. அப்போது அவர்கள் உந்து வண்டிகளைப் பெற்றிருக்கவில்லை என்று நீங்கள் கண்டு கொள்ளலாம். இந்த நவீன காலத்தில், உந்து வண்டிகளை அகலமான வழிகளில் செல்ல இழுத்துக் கொண்டும் முட்டித் தள்ளிக் கொண்டும் செல்லுகிறார்கள். பாருங்கள், நாகூம் அவைகளை விசாலமான வழி என்று அழைத்தார். பிறகு சிக்காகோவின் வெளிச் சுற்றுப் பாதையில் நின்று கொண்டிருக்கும் போது, எவ்வாறு 3 மற்றும் 4 வழிச் சாலைகள் அருகே சென்று ஒரு பெருவழிச்சாலையாக இருக்கிறது என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். தெருக்களின் மத்தியில் பள்ளமும், இரு பக்கமும் தெருப் பாதை உயர்ந்தும், பிரிந்து காணப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்விதம் ஒரு பொத்தானை அழுத்துகிறார்கள், பல மைல்கள் தூரம், புகை வண்டி உயர உயரச் சென்று கொண்டிருக்கும்; வித்தியாசமான சாயங்கால வேளையிலும், பகல் வேளைகளிலும், போக்குவரத்தில் வித்தியாசத்தை உண்டாக்கும். அகலமான பாதைகள். அக்காலத்தில், சந்துகளில் ஒரு சில, முழுக்க முழுக்க நெடுஞ்சாலை போல இருக்கும். 7. ஆனால் இந்த மேய்ப்பன் பட்டினத்தின் வழியாய் வரும் போது, அங்கே ஓர் இரைச்சல் உண்டாகும். அவனைப் பின்தொடர்ந்து ஒரு பெரும் ஆட்டு மந்தையே வரும். இப்பொழுது கிழக்கத்திப் புத்திரர் தங்களுடைய அருமையான சுவையுடைய எல்லா உணவு வகைகளையும் தெருக்களிலேயே பரப்பி வைப்பார்கள். அவர்களின் எல்லா வகையான பழங்களையும், மாமிச வகைகளையும், அவர்கள் உற்பத்தி செய்கிற எல்லாப் பொருட்களையும் கூட அவ்விதமாக தெருக்களில் பரப்பி வைப்பார்கள்... இங்கு நீங்கள் கட்டிடங்களுக்குள் பாதுகாப்பாய் வைப்பது போல. எல்லாவற்றையும் ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு வைக்கிறார்கள். அருகே இருக்கும் நடைபாதைகளில் சென்று நீங்களும் அவைகளை வாங்குகிறீர்கள். அங்கே, பக்கத்தில் செல்வதற்கு வழி இருக்காது; அது வெறுமனே ஒரு தெரு. ஆகவே ஒவ்வொருவரும் தெருக்களில் நடந்து செல்கிறார்கள். உருளையான கற்கள் பதித்த அந்தத் தெருக்களில் அவர்கள் நடந்து செல்கின்றனர். இங்கே, தெருவில் ஒரு மேய்ப்பன் நடந்து வருகிறான். நடந்து கொண்டே, நடந்து கொண்டே வருகிறான். ஒரு நகர வட்டார தூரத்திற்கு நீண்ட ஒரு ஆட்டு மந்தை அவன் பின்னால் வருகிறது. அவர்களால் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட அந்தப் பொருட்களுக்குப் பக்கத்திலேயே அவைகள் நடந்து வருகின்றன; வலது புறம் அல்லது இடது புறம் திரும்புவதே இல்லை; அந்த மேய்ப்பன் மீதே தங்கள் கண்களை வைத்துள்ளன. அவன் பின்னாலேயே செல்கின்றன. "ஓ, தேவனே, மேய்ப்பன் என்றால் என்ன பொருள், இடது பக்கமோ வலது பக்கமோ அம்மந்தை சாயவில்லை. அதன் மீதோ அல்லது இதன் மீதோ இச்சை கொள்ளவில்லை. ஆனால் அந்த மேய்ப்பனுடைய காலடிச் சுவடுகளையே பின்பற்றுகின்றன. அவைகள் தங்களுடைய மேய்ப்பனையே பின்பற்ற விரும்புகின்றன” என்று எண்ணினேன். 8. ஒரு நாள் சிறிய பிரிட்டிஸ் ஜீப் ஒன்றில் பயணித்த போது நான் கவனித்தேன், அங்கே அந்த மலையின் மீது பலவகையான மிருகங்களை ஒரு மேய்ப்பன் போஷித்துக் கொண்டிருந்தான். அவைகளை அவன் மேய்த்துக் கொண்டிருந்தான். அவைகள் தங்களைத் தாங்களே வழி நடத்திக் கொண்டு, தங்களுக்கென இடங்களைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதற்குள்ளேயே அவன் செம்மறி ஆட்டு மந்தையை உடையவனாய் இருந்தான்; அதற்குள் அவனுக்கு வெள்ளாடுகளும் இருந்தன; அவைகளுக்குள் அவன் கோவேறு கழுதைகளை உடையவனாய் இருந்தான்; ஒட்டகங்களும் இன்னும் பலவும் இருந்தன. அவைகள் எல்லாவற்றையும் அவன் மேய்த்துக் கொண்டிருந்தான். எல்லாமும் மேய்ந்து கொண்டிருந்தன. மேய்ப்பன் அவைகளைக் கவனித்துக் கொண்டே இருந்தான். "என்னே, ஒரு மேய்ப்பன் என்றால், இவ்விடத்தில் அதற்கு பலவிதமான விளக்கங்கள் உண்டு” என்று சொல்லிக் கொண்டேன். “ஓ”, “மேய்ப்பன் என்றால் மேய்ப்பவனாக இருக்கிறான்”. ஆனால் திரு. பிரான்ஹாம், உங்களுக்குத் தெரியாத இதில் வினோதமான காரியம் என்னவென்றால், இரவு வேளை வரும் போது, அவைகளைக் கவனியுங்கள்.” “எல்லாச் செம்மறியாடுகளும் சரியாக நேரே மேய்ப்பன் இடத்தில் சென்றடையும்” என்று அவர் கூறினார். “கோவேறு கழுதைகள் அங்கே அந்த மேய்ச்சல் தளத்திலேயே தங்கி விடும்.” “ஒட்டகங்களும் அவ்வாறே மேய்ச்சல் தளத்தில் தங்கி விடும்.” “வெள்ளாடுகளும் அவ்வாறு மேய்ச்சல் தளத்தில் தங்கி விடும்.” ஆனால், “இரவு வேளை வந்த போது செம்மறியாட்டு மந்தை நேராக மேய்ப்பனிடத்தில் வந்தடையும். ஏன்-? செம்மறி ஆடுகள் இரவில் தொழுவத்தில் மடக்கப்பட்டு பாதுகாக்கப்படும்” என்றார். நான் - நான் “மரியாதைக்குரியவரே, அது போல பேசாதீர்கள்; அப்படியானால், இங்கே, இந்த சாலையின் மத்தியில் நான் கூச்சலிடும்படியாய் என்னை ஆட்படுத்துகிறீர்கள்” என்று கூறினேன். பாருங்கள்-? இரவு வேளை வந்து கொண்டிருக்கிறது. ஒரே செய்தியை அநேகர் மேய்கிறார்கள் ஆனால் அவர் செம்மறியாடுகளை மட்டுமே அடையாளம் கண்டு கொள்கிறார், நான் என்ன பொருள் கொள்கிறேன் எனக் காண்கிறீர்களா-? செம்மறியாடு மட்டுமே. மறுபடியும் பிறந்த செம்மறி ஆடு. "அழைக்கப்பட்டவர்கள் அநேகர்; தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்.'' ஓ, இன்று அவரை நான் நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? அவருடைய வார்த்தையைத் திறப்பதற்கு முன்பு, இப்போது நாம் அவரிடம் பேசுவோமாக. 9. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த ஓய்வு நாளில் நாங்கள் உம்மிடத்தில் வருகிறோம். வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேகம் சூழ்ந்து மந்தாரம் உண்டாயிருக்கிறது. பனி மழை பெய்வது போலும், பனிக்காலம் போலும் இருக்கிறது. இந்த இளவேனில் காலத்தில், அதிக ஈரப்பதம் உண்டாகவில்லையென்றால், எவ்வாறு விவசாயி பயிர் செய்வான்-? உணவுத் தானியம் விளைவிக்க முடியாமற் போகும்; நிலம் உலர்ந்து விடும்; ஜனங்கள் அழிந்து விடுவார்கள். இது கிறிஸ்தவ வாழ்வின் அனுபவம் போல் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். சில நேரங்களில் பயங்கரமான சிட்சிப்புக்குள் செல்ல வேண்டி இருக்கும். கர்த்தருடைய கடிந்துகொள்ளுதல் நாம் கனி கொடுக்கும் கிறிஸ்தவர்களாய் ஆவதற்கு அநேக காரியங்கள் நம்மைச் சீர்படுத்தும். சில நேரங்களில் நம்மில் இருக்கும் களைகளைப் பிடுங்கிப் போட்டு, கிளை நறுக்கி சுத்தம் செய்தல் வேண்டும். நம்முடைய கரங்களை விட்டு அவைகளை தூர எறிந்து போட வேண்டும். "ஓ, தேவனே, நீர் எங்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்-?” என்று சில சமயங்களில் நாம் எண்ணுகிறோம். ஆனால் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிவார். ஆகவே, பிதாவே, இன்று எங்கள் ஒவ்வொருவரையும் கிளை நறுக்கிப் பரிசுத்தப்படுத்தும் என்று ஜெபிக்கிறோம். சிறியவரிலிருந்து, பெரியவர், மற்றும் மேய்ப்பர் வரை எல்லோரையும் பரிசுத்தப்படுத்தும். தேவனே, எங்கள் ஒவ்வொருவரையும் கிளை நறுக்கி சுத்தம் செய்யும் என்று ஜெபிக்கிறோம். பிதாவே, நீர் விரும்பாத எல்லாவற்றையும் எங்களை விட்டு எடுத்துப் போடும். கனி கொடுத்து வாழும் கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தடையாயிருக்கிற எல்லாவற்றையும் எங்களை விட்டு எடுத்துப் போடுவீராக. நாட்கள் வருகிறது. அது இருளாக இருக்கும். அப்படியானால், நாங்கள் மந்தையின் தொழுவத்திற்குள் பிரவேசிக்க விரும்புகிறோம். பிதாவே, நாங்கள் இன்று செம்மறி ஆடுகளாய் இருக்க விரும்புகிறோம். சரியாக மேய்ப்பனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்புகிறோம். அவர் எங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் கொடுத்திருக்கிறார். ''என்னுடைய சித்தத்தை நிறைவேற்ற வரவில்லை; என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே வந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தேவனே, இன்று, அதுவே எங்கள் நோக்கமாக இருக்கட்டும். எங்களை இரட்சித்த தேவனுடைய சித்தத்தை செய்வோமாக. 10. சபையை இன்று ஆசீர்வதியும், முழு உலகத்திலும் நடந்து கொண்டிருக்கிற ஞாயிறு பள்ளிகளை ஆசீர்வதியும். கர்த்தாவே, எங்களை நினைவுகூரும். ஓவன்ஸ்போரோ என்ற இந்தச் சிறிய இடத்தை இன்று ஆசீர்வதியும். எங்கள் மீது உம்முடைய ஆசீர்வாதங்களை ஊற்றுவீராக. நாங்கள் தேவை உள்ளவர்களாயும், நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களாயும் இருக்கிறோம். “அது நிரப்பப்படும்” என்பது உம்முடைய வாக்குத்தத்தமாக இருக்கிறது. இவைகளை இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். 11. இக்கூட்டங்களில் சகோ.ரோஜர்ஸை சந்திக்கிறோம். இங்கு வந்து சகோ.ரோஜர்ஸை சந்திப்பது என்பது எப்போதுமே ஒரு மகத்தான சிலாக்கியமாக இருந்து வந்து உள்ளது. இங்கே இருக்கும் அன்பிற்குரிய பரிசுத்தவான்களாகிய உங்களையும் மற்றுமுள்ள ஓவன்ஸ் போரோ, மற்றும் பட்டினங்களைச் சுற்றியுள்ள சபைகளையும் சந்திப்பது என்பது ஒரு மகத்தான சிலாக்கியமாக இருக்கிறது. அவர் சீனாவைச் சேர்ந்தவரோ, ஜப்பான், கொரியா மற்றும் ஜெர்மன் நாட்டை சார்ந்தவரோ, என்றாலும், அவர் சகோதரனாக அல்லது சகோதரியாக இருக்குமட்டும், அவர் என்னவாக - யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்குள் ஒரு சிறு துளியளவு வித்தியாசம் கூட கிடையாது என்பதைக் கற்று அறிந்து உள்ளேன். அவர்கள் எல்லோருமே ஒரே ஆட்டுத் தொழுவத்தைச் சேர்ந்த ஆடுகளே. உலக முழுவதுமுள்ள வெவ்வேறு தேசங்களைக் கடந்து கவனித்துள்ளேன். கம்யூனிஸ்டு போல.... நீங்கள் ஒரு கம்யூனிஸ நாட்டிற்குச் சென்றால், அங்கே நான் இருந்து உள்ளேன், கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஜனங்கள் துப்பாக்கிகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே இராணுவ வீரர்கள். என் தலையை ஒளித்துக் கொண்டு, என்னைச் சுற்றிலும் பெரும் பாராங்கற்களை வைத்து மூடிக்கொண்டு, அவர்கள் சுட்டுவிடாதபடிக்கு, அவர்கள் என்னை ஒரு இருட்டு அறைக்கு அழைத்துச் செல்லும் வரை என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்த இருளில் என்னை அவர்கள் சுட முடியாது. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது என்பது, அப்படிப்பட்ட கடினமான ஒரு காரியமாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை, மகத்தான சந்தோஷத்தைக் கொண்டு செல்வது என்பது அவ்வளவு கடினமானதாகும். இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும், இயேசு நமக்கு இனிமையானவராகவும், நல்லவராகவும், அன்புள்ளவராகவும் இருக்கிறார் என்பதை அறியும் போது அது மிகவும் பிரமிப்பளிக்கிறது. அவர் இருக்கிற விதமாக... அதைக் குறித்து பயப்படத் தேவையில்லை, செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும், அவ்வளவே. இன்று, நாங்கள் உங்களுடனிருப்பது ஒரு சிலாக்கியமாகும். இந்த பிற்பகல் வேளையில், இந்த விளையாட்டு மைதானத்தில் இருப்பது, அல்லது சரியாகச் சொல்வோமானால் இந்த சாயங்கால நேரத்தில் ஆராதனையில் இருப்பது ஒரு நல்ல தருணமாகும். நீங்கள் அனைவரும் ஒரு நல்ல இடத்தைப் பெற்றுக் கொள்ளும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். உங்களுடைய சொந்த சபையில் ஆராதனை இல்லையென்றால், நீங்கள் ஏன் எங்களுடன் ஐக்கியம் கொள்ளக் கூடாது-? உங்களுக்காக எல்லா உதவிகளையும் செய்ய மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் பாரத்தை சற்று இலகுவாக்கவும், சரியான காரியத்தைச் செய்வதற்கு சிறிய நல்ல ஸ்தலத்தை ஜனத்தாருக்கு செய்யவும், கடினத்தை சற்று குறைக்கவும், தவறான செயல்களைச் செய்யும் கடினமான இடங்களை இல்லாமல் செய்யவும், இப்படி சந்தோஷம் அடைகிறோம். அதற்காகத்தான் இப்படிப்பட்ட கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுகிறது. 12. இன்று, இப்போது, சிறிதளவே பேசப்போகிறோம். நான் மோசமான குரல் உடையவனாய் இருக்கிறேன். என்னுடைய இருதயத்தில் ஒரு தரிசனம் கண்டேன். இன்று காலை, ஞாயிறு பள்ளி நடக்கும் போதோ, இந்த பிற்பகல் கூட்டத்தில் பிரசங்கம் செய்வதற்கு முன்பாகவோ, இன்று காலை இவ்விதமாக எண்ணினேன்... இன்று, தேவனுக்குச் சித்தமானால், இந்த பிற்பகல் வேளையில், மிக முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன். அல்லது சரியாகச் சொன்னால் இந்தப் பிற்பகல், நாம் வாழுகிற இக்காலத்தைக் குறித்ததான, மிகச்சிறந்த வேத வசனத்தை பிரசங்கிக்கப் போகிறேன். தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு, அந்தப் பொருளில் பேசப் போகிறேன் என்று நம்புகிறேன். ஒரு வேளை நான் அதை ஒரு வித்தியாசமான முறையில் பிரசங்கிக்கப் போகிறேன்... முதலாவது, செய்திகளில் முதலாவதாக, சில வாரங்களுக்கு முன்பதாக, பரிசுத்த ஆவியானவர் என்னைச் சந்தித்த பிறகு, நான் பிரசங்கித்த முதல் செய்தி... இந்தக் காலை வேளையில் நாம் அனைவரும் ஒன்றாகக் கூடி வந்திருக்கிறோம் என்று எண்ணினேன். ஒரு சிறிய கிறிஸ்தவ குழுவினராக நாம் இங்கே கூடி வந்திருக்கிறோம். சற்று நேரம், நம் இருதயத்திற்கு இருதயமாக ஒருவரோடொருவர் பேசப் போகிறோம். இயற்கைக்கு மேம்பட்டவைகளைக் காண வேண்டும் என்கிற வாஞ்சை ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் இருக்கிறது. 13. இங்கே, கொஞ்ச காலத்திற்கு முன்பு, கலிபோர்னியாவில் ஒரு கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். தலையில் செயற்கை முடியை அணிந்தவனாக, ஒரு ஜோடி கருப்பு நிறக் கண்ணாடியை அணிந்திருந்தேன், ஒரு சகோதரனுடைய இறையியலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அது அங்கு இல்லாமல் போனால், என்னை அடையாளம் கண்டு கொள்ளச் செய்தி இருக்கும். வலது பக்கத்தில் ஜனங்களோடு ஜனங்களாக அமர்ந்திருந்தேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. உட்கார்ந்து கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைப் பற்றி அவர்கள் பேசுவதையும் கவனித்தேன். அது நான் என்று அவர்கள் அறியவில்லை. சும்மா அமர்ந்திருந்தேன். தன் தோள்பட்டைத் துணியை தூக்கி விட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒரு மனிதனுக்கருகில் உட்கார வேண்டியதாயிற்று. ஒரு ஊழியக்காரர் மேடைக்கு வந்தார். தெய்வீக சுகமளித்தல் கூட்டத்தில் என்னுடைய ஊழியத்தில் மனந்திரும்பியவர்களில் அவரும் ஒருவர். ஆனால், அவர் சிறிது நேரமே பிரசங்கிப்பார், பின், சற்று வியர்க்கும் போது கை சுத்தம் செய்யும் இடத்திற்குச் சென்று, முகம் கழுவி, துணி மாற்றிக் கொண்டு, மறுபடியும் பிரசங்க மேடைக்கு வருவார். ஒரு வேலையாளைக் கொண்டு அவருடைய உடைகளை மாற்றுவார் அந்த மகத்தான மனிதன் அங்கே உட்கார்ந்து கொண்டு, தலையைத் துலுக்கிக் கொண்டு என்னைக் கவனித்து விட்டார். "கிறிஸ்துவின் ஊழியக்காரர் அவ்விதமாக நடந்து கொள்வாரா-?” என்று கூறினார். 14. "நான் நியாதிபதியல்ல” என்று கூறினேன். நான் சொன்னேன். அவர் சொன்னார், "நல்லது” என்றார். அவருடைய செய்தி மிகவும் அற்புதமானது என்று எண்ணுகிறேன்” என்று நான் கூறினேன். “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா-?” என்று அவர் கேட்டார். “ஆம், ஐயா, நான் ஒரு கிறிஸ்தவனே” என்று கூறினேன். "நல்லது” என்று அவர் கூறினார். “ஒரு கிறிஸ்துவின் ஊழியக்காரர் இவ்விதமாக, எல்லா விதமானவைகளையும் அணிந்து கொண்டு, இவ்விதமாக உடையுடுத்திக் கொண்டு இப்படி நடந்து கொள்வாரா-?...” என்று கேட்டார். “நல்லது, பாருங்கள், என்னுடைய கருத்தின்படி, தேவன் வித்தியாசமான வெவ்வேறு வகை வகையான விதத்தில் ஜீவிக்கும் ஜனங்களைப் பிடிப்பதற்கு, தன்னுடைய கரத்தில் வித்தியாசமான ஜனங்களைக் கொண்டு உள்ளார்” என்று நான் கூறினேன். “ஏன் அந்த மனிதன் ஒவ்வொரு வருடமும் இரண்டு எல்-டோரடோ கார்களை வாங்குகிறார்” என்பதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். "தேவன் அவருக்கு அவ்வளவு நல்லவராக இருப்பதினால், நான் தேவனுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன்” என்று கூறினேன். பாருங்கள்-?... ஆனால் அவர் என்னை வினோதமாகப் பார்த்தார். “நீங்கள் கிறிஸ்தவரா-?'' என்று கேட்டார். “நான் ஒரு ஊழியக்காரன்” என்று பதிலளித்தேன். “என்னுடைய பெயர் இன்னார் இன்னார்” என்று அவருடைய பெயரைக் குறிப்பிட்டார். “என்னுடைய பெயர் பிரான்ஹாம் என்பது” என்று நான் கூறினேன். “வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறாரே, அந்த பிரான்ஹாமாக நீங்கள் இருக்க முடியாது” என்று அவர் கூறினார். “ஆம் ஐயா, அவர் தான் நான்” என்றேன். “ஓ, அப்படியா-?” என்றார் அவர். 15. இந்த மற்றொரு சகோதரனை நான் ஏன் அழைத்தேன் என்பதை அவரால் பார்க்க முடியும். “திரு.பிரான்ஹாம்” என்று அழைத்து, “நீங்கள் ஒரு பாப்டிஸ்டு அல்லவா-?” என்று கேட்டார். “ஆம் ஐயா, நான் பாப்டிஸ்டாக இருந்தேன்” என்றேன். “ஒன்றைக் குறித்து உங்களிடம் கேட்க விரும்புகிறேன்” என்றார். “நான் ஒரு குறிப்பிட்ட சபையில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவன். நல்லது, நான் ஒரு - ஒரு பிரஸ்பிட்டேரியனும் கூட” என்றார். “அது என்ன தெரியுமா-? இங்கே, இந்த மேற்குக் கடற்கரையில், பிரெஸ்பிடேரியன்களாகிய நாங்கள், மேற்குக் கடற்கரை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணையும்படி (தையல் போட்டது போல) நிரம்பி இருக்கிறோம்” என்றார். "நாங்கள் பெரிய பெரிய மகத்தான சபைகளை உடையவர்களாய் இருக்கிறோம், மேற்குக் கடற்கரையில் எல்லாச் சபைகளிலும் சிறந்த ஜனங்களைப் பெற்று உள்ளோம்” என்று கூறினார். “எது உடைத்துப் போட்டது தெரியுமா-?” என்றார். “இல்லை, ஐயா” என்று கூறினேன். அவர், அந்த கிறிஸ்தவ விஞ்ஞான கோட்பாடு வந்து எங்கள் சபையை உடைத்து விட்டது-?” என்றார். “இப்போது, இந்த பெந்தெகொஸ்தே குழுவினர் வந்து, கிறிஸ்தவ விஞ்ஞானம், மற்றுமுள்ளவைகளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் அவர்." ஊ - ஊ...' என்றேன் நான். “முனைவர் அவர்களே, பசியுடைய பிள்ளைகள், பசியுடன் இருக்கும் போது, குப்பையில் கிடைப்பதைக்கூட உண்பார்கள் தெரியுமா-?” என்றேன். "நல்லது, அது சரி என்று அனுமானிக்கிறேன்” என்றார். "நீங்கள் சொன்னது போல, பிரெஸ்பிட்டேரியன்களாகிய நீங்கள் தேவனுடைய வார்த்தையில் தரித்திருந்து, பிள்ளைகளுக்கு ஜீவ அப்பத்தைக் கொடுத்து இருப்பீர்களென்றால் அந்தக் காரியங்கள் ஒரு போதும் அவர்களை உடைத்துப் போடாது என்று கூறினேன். நீங்கள் அதை விட்டு விட்டதால் இது நேர்ந்தது என்றேன். மேலும், “ஜனங்கள் இன்னும் ஜனங்களாகவே இருக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் திரைக்கு அப்பால் பார்க்க முயற்சிக்கிறார்கள். அவன் எங்கிருந்து வந்தான், எங்கே போகப் போகிறான் என்பதைக் காண முயற்சிக்கிறான். ஜீவனுள்ள தேவனுடைய சபை அதை உற்பத்தி செய்யவில்லை என்றால், அப்படிப்பட்ட நேரத்தில் பிசாசு சில மனித கோட்பாடுகளை ஆரம்பித்து சில பொய்யான காரியங்களை அவர்களுக்குக் கொடுத்து விடுவான்” என்றேன். “ஆகவே நீங்கள் தேவனுடைய வார்த்தையில் தரித்திருக்க வேண்டும்; அப்படியானால் அவர்கள் அனைவருமே பிரஸ்பிட்டேரியன்களாக இருப்பார்கள்” என்று கூறினேன். உண்மையாக அது தான் சரியானது. பொதுவாக ஜனங்களின் உணர்வுகள் அவ்விதமான வழியிலேயே தான் இருக்கும் என நான் எண்ணுகிறேன். 16. இப்போது, இங்கே ஒரு சிறு வேதபகுதியை வாசிக்க விரும்புகிறேன். ஒரு வேளை தேவன் அதனோடே தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டித் தருவார். என்னுடைய கடிகாரத்தை தூர வைத்து விடுகிறேன். ஏனென்றால் செய்தியைத் தொடர்ந்து, வெகு விரைவில் உங்களுடைய ஞாயிறு பள்ளி தொடங்கும் என்பதை நான் அறிவேன். ஆராதனைக்குப் பின் சிலவற்றை நாம் பெற்றுக் கொள்வோம். நான் சற்று நேரம் உங்களுடன் பேசப் போகிறேன் என்று எண்ணினேன். இக்காலையில், ஞாயிறு பள்ளிப் பாடமாக, உங்கள் இருதயத்தோடு இருதயமாக கொஞ்சம் பேசப் போகிறேன். கடந்த இரவில் வேதத்தில் எந்தப் பக்கத்திலிருந்து பேசினோமோ, அதன் தொடர்ச்சியாக, இரண்டு இராஜாக்களின் புஸ்தகத்திலிருந்து பிரசங்கிக்கப் போகிறேன். இப்போது இரண்டு இராஜாக்களின் புஸ்தகம் 5-ம் அதிகாரம்: 4-வது வசனத்தைக் கவனியுங்கள். (தமிழ் வேதாகமத்தில் 8-வது வசனம் - மொழிபெயர்ப்பாளர்.) இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்ட செய்தியைத் தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்ட போது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொள்வானேன்-? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்து கொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான். 17. இக்காலை வேளையில், இப்போது, சற்று நேரத்திற்கு, “இயற்கைக்கு மேம்பட்டவைகள்” என்ற பொருளில் நாம் பேச விரும்புகிறோம். நாம் அனைவருமே, இயற்கைக்கு மேம் பட்டவைகளுக்காக பசி உடையவர்களாய் இருக்கிறோம். மெதொடிஸ்டு சகோதரர்களாகிய நீங்களும் கூட இயற்கைக்கு மேம்பட்டவைகளுக்காகப் பசி உடையவர்களாய் இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட இயற்கைக்கு மேம்பட்ட உன்னதமானவைகளுக்காக தாகம், கொண்ட ஒரு மெதொடிஸ்டு பிரசங்கியாரைக் கொண்டிருந்தேன். பாப்டிஸ்டுகளாகிய நீங்களும் இயற்கைக்கு மேம்பட்டவைகளுக்காக தாகமுடையவர்களாயும், பசியுடையவர்களாயும் இருக்கிறீர்கள். அவர்கள் எல்லோருமே அப்படி இருக்கிறார்கள். இப்போது, தேவன் உண்மையாகவே தேவனாக இருப்பாரானால், அவர் இப்போதும் இயற்கைக்கு மேம்பட்ட வராகவே இருக்கிறார். இதை விசுவாசிக்கிறீர்களா-? அவர் அவ்விதமாகவே இருக்க வேண்டும். இப்போது, தேவனை சரித்திர காலத்திற்கு முந்தைய தேவனாகவோ, அல்லது சரித்திரத்தின் தேவனாகவோ வைப்பதற்கு நாம் முயற்சி செய்கிறோம். ஆனால், சரித்திரத்தின் தேவன் இன்று என்ன நன்மைகளை செய்கிறார்-? எலியாவின் தேவன், இன்றும் அதே தேவனாக இல்லையென்றால், ஒரு மனிதனுக்கு என்ன பயனுண்டாகும்-? வேத பாட சாலையில் அவரைக் குறித்து என்ன கற்கிறீர்கள்-? நல்லது, அவர் சரித்திரத்தில் உண்மையாக இருந்து, இன்று அவ்வாறு இல்லையென்றால், நீங்கள் வேளாண்மையையோ அல்லது வேறு ஏதாவதொன்றையோ அல்லது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் எதையாவதையோ கற்பது நல்லது. அது சரியா-? அவர் சரித்திரத்தின் தேவனாக இருந்து, இன்று அவ்வாறு இல்லையென்றால், உங்கள் பிள்ளைகளை ஊழியத்திற்காகப் படிக்க வைக்காமல், ஒரு பொறியாளனாகப் படிக்க வைத்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மோசேயின் தேவன், இன்றும் அதே தேவனாக இல்லை என்றால், ஒரு மனிதனுக்கு என்ன நன்மை பயக்கும்-? இப்பொழுது, இதைச் சற்று உங்கள் சிந்தையில் நிதானித்துப் பாருங்கள். ஆகவே நாம். ஆகவே எப்போதும் நம்முடைய அனுபவங்களைக் குறித்தே கருத்துடையவர்களாய் இருக்க வேண்டும். 18. நேற்று இரவு, ஒரு சிறிய பெண்மணி, இன்று நம் மத்தியில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தகப்பனார், ஒரு குறிப்பிட்ட பெரிய ஸ்தாபன சபையில் பிரசங்கியாக இருக்கிறார்கள். அவளுடைய தகப்பனார் எப்போதாவது அந்த சபையில் மேய்ப்பராக இருந்திருக்கிறாரா-? என்று கேட்டேன். ''சகோ.பிரன்ஹாமே, என்னுடைய தகப்பனார் இலக்கணப் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்துள்ளார்; எனவே அவர்கள் என் தகப்பனாரைப் பெரிய சபைகளில் அனுமதிக்க மாட்டார்கள். அவருடைய கல்வி அறிவு மிகவும் குறைவு” என்றும் அந்தப் பெண்மணி கூறினார்கள். ஒரு வேளை அவர் ஆவியில் நிறைந்த ஒரு அருமையான மனிதனாக இருக்கலாம். ஆனால் அந்த ஸ்தாபன அமைப்பு, அவர் எவ்வளவு ஆவியில் நிறைந்த மனிதனாக இருந்தாலும், கல்வியறிவு குறைவாக இருப்பதனால், அவருக்குப் பதவி உயர்வு கொடுக்காது. அங்கே தான் அவர்கள் தேவனை இழந்து விடுகிறார்கள். பேதுருவுக்கு அவருடைய சொந்த பெயரைக் கூட கையெழுத்துப் போடத் தெரியாது. தேவனுடைய இராஜ்ஜியத்தின் திறவு கோல்கள் இயேசு கிறிஸ்துவினால் அவருக்குக் கொடுக்கப்பட்டது. நாம் கல்வியில் கவனம் செலுத்துகிறோம். கல்வி நல்லது தான். ஆனால் அது பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரப்படுகிறது. சபையானது, இயற்கைக்கு மேம்பட்டவைகளால் தேவனை அறியும் ஸ்தலமாகவும், தேவனைக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஸ்தலமாகவும் இருக்கிறது. தேவன் இயற்கைக்கு மேம்பட்டவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். 19. இப்போது, தேவன் இன்றும் அவர் எப்போதும் இருந்த விதமாகவே இருக்கிறார் என்பதை, சபையார் கூடியிருக்கிற இந்த இடத்தில் அவர்கள் காண வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஜனங்கள் தேவனை விட்டு அகன்று விடுகின்றனர்; ஆனால் தேவன் தேவனாகவே இருக்கிறார். அவருடைய பண்புகள், அவருடைய வல்லமை, அவருடைய வாஞ்சை இவைகள் எல்லாமும், ஒவ்வொரு சந்ததியிலும் மாறாததாய் இருந்து வந்துள்ளது. அது ஒரு போதும் மாறுவதில்லை. எப்போதும் அதே போலவே இருக்கிறது. ஜனங்கள் தாம் தேவனை விட்டு அகன்று விடுகின்றனரே தவிர, தேவன் ஜனங்களை விட்டு அகலுவதில்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தை இழந்து விடுகின்றனர். தேவன் எங்கும், எல்லா இடத்தையும் நிரப்புகிறவராயிருக்கிறார். அவர் சர்வவியாபி. ஆகவே அவர் எப்போதும் எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் எல்லா இடங்களிலும் இருந்து வந்துள்ளார். எல்லா இடங்களிலும் என்றென்றைக்கும் இருப்பார். 20. ஆனால், ஜனங்களுடைய மனப்பான்மையே முடிவினைக் கொண்டு வரும். அதன் காரணமாகவே, பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் மேலறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. பரிசுத்தாவி வரும் வரைக்கும் ஜெபிக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால், ஏக சிந்தையும், ஒருமனமும் கொண்டவர்களாய் ஒரு இடத்தில் கூடி வந்தார்கள். சூழ்நிலை, அது தான் முடிவுகளைக் கொண்டு வருகிறது. அதை விசுவாசிக்கிறீர்களா-? இக்காலை வேளையில், இந்தக் கட்டிடத்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஸ்திரீயும், பையனோ அல்லது பெண்ணோ, இயேசு கிறிஸ்துவைத் தவிர எல்லாவற்றையும் தங்கள் சிந்தையிலிருந்து எடுத்துப் போடுவார்களாக. சரியாக இப்போது, அவர் இங்கே நின்று பிரசன்னமளிக்கிறார் என்று விசுவாசிப்பார்களாக. ஏதோவொன்று சம்பவிக்கப் போவதை நீங்கள் காணப் போகிறீர்கள். அது இந்தக் காலை வேளையில், செய்தித்தாளின் தலைப்புகளாக வரும். அது சரியா-? இதுதான் வரக் காரணமாயிருக்கும். சுற்றுச் சூழல். பிரசங்க பீடத்திலிருந்து சிரிப்பு காட்டுவதை நான் நம்புவது கிடையாது. ஏனென்றால், பிரசங்க பீடம் சிரிப்பு காட்டுவதற்கான இடமல்ல. அது ஒரு புனிதமான இடம். இதற்காக, சிலவற்றை நான் மேற்கோள் காட்டுகிறேன். சகோ.போஸ்வர்த் நகைச்சுவை பண்ணுவதில் கெட்டிக்காரர். அவர், "சகோ.பிரன்ஹாம், சுற்றுச்சூழலை நிருபிக்க வேண்டும்” என்று சொன்னார். “நீங்கள் ஒரு கோழி முட்டையை எடுத்து, அதை ஒரு நாய்க்குட்டியின் அடியில் வைத்துக் கட்டினால், அது ஒரு கோழி குஞ்சைப் பொரிக்கும்” என்றார். பாருங்கள்-? நாய்க்குட்டியின் சரீரத்திலுள்ள உஷ்ணம் அந்த முட்டையைப் பொரிக்கச் செய்யும். அது ஒரு கோழிக்கடியில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அது ஒரு நாய்க்குட்டியின் அடியில் கூட வைக்கப்பட்டு பொரிக்கும் தன்மையைப் பெறும். அது குஞ்சு பொரிக்கும் இயந்திரத்தில் கூட வைக்கப்படலாம். அது சுற்றுப்புற சூழலைப் பொறுத்ததே. சுற்றுப்புறச் சூழல் தான் அற்புதங்களையும் ஜனங்கள் மத்தியில் அடையாளங்களையும், தேவனுடைய வல்லமையையும் கொண்டு வருகிறது. அது ஜனங்களுடைய மனநிலையையும் சுற்றுப்புற சூழலையும் பொறுத்தது. ஜனங்கள் ஓர் இடத்தை அடைந்து, நிதானிப்பதும், அதிசயிப்பதும், குழப்பம் அடைந்த சிந்தனை உடையவர்களாய் இருந்தால், அது எல்லாவற்றையும் கிழித்துப் போடும். எங்கே நிற்கிறோம் என்பது கூடத் தெரியாமல், அவர்களில் பாதி பேர் ஆவிக்குரியபடி கற்றுக் கொடுக்கப்படவும் இல்லை. அங்கே சூழ்நிலைகள் எல்லாமும் சரியாயிருக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்-? உங்களால் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது; அது சரியாக இருக்காது. ஒருமனப்பட்டு ஒரு இடத்திலே அமர்ந்திருந்து ஒரே நோக்கத்தோடு ஒரு காரியத்தைக் காண எதிர்நோக்கும் போது நீ ஏதோ ஒரு காரியத்தைக் காணப் போகிறவனாயிருக்கிறாய். 21. ஆனால், விஞ்ஞான உலகத்தைப் பார்ப்பீர்களானால், அது செயல்படாது. நீங்கள் எல்லோருமே விற்பனையாளர்கள், செவர்லட்ஸ் அல்லது போன்டியாக்ஸ் அல்லது வேறு ஏதோ ஒருவகை வாகனம் இவைகளை விற்பனை செய்யக்கூடிய ஒரு கூட்டத்தார் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இவைகள் எல்லாவற்றையும் விட ஸ்டூட்பேக்கர்ஸ் வாகனமே சிறந்தது என்று உண்மையிலேயே உங்கள் இருதயத்தில் நினைவு உடையவர்களாய் இருப்பீர்கள். நாம் எல்லாவற்றையும் இங்கே கொண்டு வருவோம், அப்போது புயூக் என்ற வாகனம் சிறந்தது என்போம். மற்ற வாகனம் எல்லாவற்றையும் இங்கே கொண்டு வருவோம், நீங்கள் ஒரு போதும் ஒரு நல்ல கூட்டத்தைப் பெற முடியாது. பிசாசின் வேலையை எடுக்கும் போது... 22. அங்கே செல்லுங்கள்... ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மனிதன் எழுந்து நின்று, “இப்போது நல்லது...'' என்று கூறுகிறான். அவன் நடனமாடப் போகிறானா அல்லது இல்லையா என்பது அவனுக்கே- அவனுக்கே தெரியாது. இந்தப் பெண் அங்கே சென்று, அதை... அங்கே இசை இசைக்கப்படுகிறது. “அருகில், என் தேவனே உமதருகில்” என்ற இசை. ஊ... நடனமாடுவதற்கு எத்தகைய ஒரு சூழ்நிலை. நல்லது, நிறைய சுற்றுச் சூழல்கள் உண்டு; அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது... தேவனுடைய சபைக்கு ஆராதனைக்குச் செல்லுங்கள். அங்கு எல்லாமும் இதிலிருந்து வித்தியாசமாய் இருக்கும். சரி-? நடனமாடுவதற்குச் சரியான சூழ்நிலையைக் கொண்டு வர வேண்டுமானால், பழங்காலத்து இசையை இசைக்க வேண்டும், அது நடனமாடச் செய்யும். அவர்கள் நடனமாடப் போகிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் எண்ணும் போது அது என்ன ஒரு நல்ல சமயம்-! என்று எண்ணத் துவங்குவார்கள். அங்கே ஒரு பெரிய கூச்சல் சப்தமுள்ள நேரம் உண்டாயிருக்கும். பியானோவில், ஆர்கன் இசைக்கருவியில் சரியான நல்ல வகையான இசையை எழுப்புங்கள். அதுவே ஒவ்வொருவரையும் இயேசுகிறிஸ்து அங்கிருக்கிறார் என்ற சூழ்நிலையை உணரச் செய்யும். அத்தகைய சூழல், அவர்களுக்குத் தேவையானது எதுவோ அதைப் பெற்றுக் கொள்ளச் செய்யும். ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது; அது என்ன. அங்கு ஏற்படும் சுற்றுப்புறச் சூழல். அத்தகைய சூழ்நிலையை உருவாக்குவது என்பது மிகக் கடினமான செயலாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஜனங்களைக் கொண்டு வருவது, ஆராதிக்கும் சூழ்நிலை, விசுவாசிக்கச் செய்யும் சூழ்நிலை இவைகளுக்குள் அவர்களைக் கொண்டு வர வேண்டும். 23. அதன் காரணமாக, சில நேரங்களில் அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட தெய்வீக ஜீவியமானது மூடத்தனமாகவோ, பைத்தியக்காரத்தனமாகவோ அல்லது அறிவு கடந்த நிலை போலவும் இருக்கும். பொது ஜனங்களின் கண்களில் அவ்வாறு காணப்படுவோம். நீங்கள் நரம்பு சம்மந்தமான கோளாறு உடையவர்கள் என்றும், அல்லது பைத்தியக்கார மனிதன் என்றும் எண்ணப்படுவீர்கள். ஏனென்றால் நீங்கள் வாசம் பண்ணும் இடத்தை மாற்றிக் கொண்டீர்கள், வித்தியாசமான சுற்றுச் சூழலைப் பெற்றுக் கொண்டீர்கள். அப்படிப்பட்ட சுற்றுச் சூழலில் தாபரிக்க வேண்டும் என்பதே உங்களுடைய ஒரே நோக்கம்; ஒரே எண்ணம். ஒரு முறை அப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் வருகிற எந்தவொரு மனிதனுக்கும் வேறு எங்கும், எப்போதும் திருப்தி இருக்காது என நான் விசுவாசிக்கிறேன், ஆகவே நம்முடைய சபைகள் பரிசுத்த ஆவியானவருடைய ஆளுகைக்குள் இருக்க வேண்டும். மனிதர்களும், ஸ்திரீகளும் அவர்களுடைய வேலை ஸ்தலத்தில் எங்கிருந்தாலும், அப்படிப்பட்ட சுற்றுப்புறச் சூழலுக்கு ஒரு முறை வந்தவர்கள், மீண்டும் வர வேண்டும் என்கிற வாஞ்சை அவர்களுக்குள் இருக்க வேண்டும். இருந்து கொண்டேயிருக்கும். 24. இப்போது, பெந்தெகொஸ்தே ஜனங்களுக்கு மத்தியில், அசெம்பிளி ஆஃப் காட் சபையில் பேசிக் கொண்டிருக்கிறேன்... இப்போது, பெந்தெகொஸ்தே ஜனங்களை நேசிக்கக் கற்றுக் கொண்டேன். அவர்கள் என்னுடைய சகோதரர்களும் சகோதரிகளுமாய் இருக்கின்றனர். ஆனால், பல வேளைகளில், நான் பெந்தெகொஸ்தேயினன் என்னும் தகுதியை வைத்துப் பார்க்கும் போது, ஆராதனைக்குப் பதிலாக, உணர்ச்சி வசப்படுகிற சூழல் உண்டாகிறது. அது துரிதமாக மரித்து விடுகிறது. அங்கத்தினர்கள் இது, அது என்றாகி விடுகின்றனர். ஆனால், அப்படிப்பட்ட ஜனங்களை ஒரு குழுவினராக ஒன்று சேர்ந்தால், அங்கே, உண்மையான பரிசுத்த ஆவியின் சுற்றுச் சூழல் உண்டாகும். அங்கே பரிசுத்தமும், உத்தமும் கொண்ட ஆராதனை உண்டாகும். அங்கு உட்கார்ந்திருக்கும் புருஷர்களுக்கும், ஸ்திரீகளுக்கும் தேவனைக்குறித்த ஒரு உணர்வு உண்டாயிருக்கும். மகத்தான தேவனுடைய சர்வ வல்லமை அங்கிருப்பதை அறிவார்கள். எந்தவித சந்தேகத்தின் நிழல் கூட இன்றி, எல்லாவற்றையும் செய்ய ஆயத்தமாவார்கள். இந்த சாயங்கால வேளையில் இங்கு உட்கார்ந்திருக்கும் அவிசுவாசிகளுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏதாவது ஒன்று சம்பவிக்காமல், அப்படிப்பட்ட சுற்றுச் சூழலுக்குள் உங்களால் ஒரு போதும் வரமுடியாது. 25. கொஞ்ச காலத்திற்கு முன்பு நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். ஒலிப்பதிவு கருவிகள் இருந்தது... பையன்கள் என்னுடன் இருந்தனர். “கிறிஸ்துவின் மறைவான ஜீவியம்” என்னும் தலைப்பில் உள்ள பிரசங்க செய்தியைப் போட்டனர். அது கிறிஸ்துவை எப்படி அடைவது என்பது பற்றியும், சில ஜனங்கள் எப்படி மேடு பள்ளங்களை, (கடினமான வாழ்க்கையைப் பெறும் போது) அவர்களால் (நிலைநிற்க) முடியவில்லை ... என்பது பற்றியதான செய்தி. உங்களுக்கென்று ஒரு ஸ்தலத்தை நீங்கள் கண்டு கொள்ள வேண்டும். உண்மையாகவே, பிரகாரத்தின் வெளியே மன்னா பெய்தது. அந்த மன்னாவினால் அநேக ஜனங்கள் ஜீவிக்கின்றனர்; ஆனால் அவர்கள் சரியான ஜீவியம் ஜீவிக்கவில்லை; அவர்கள் மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் மேடு பள்ளங்களை, கஷ்ட நஷ்டங்களைச் சந்தித்தார்கள். நல்ல நாட்களையும், கெட்ட நாட்களையும் அனுபவித்தார்கள். ஆனால், சுற்றுப்புறச் சூழலைக் கவனிக்காத அல்லது நிலைமை எப்படியிருக்கிறது என்பதைக் கவனிக்காத, முற்றிலும் ஒப்புக்கொடுத்த அப்படிப்பட்ட ஜனங்களை சந்திப்பீர்கள் என்றால், எல்லா நேரமும் மேல் மாடியில் இருப்பார்கள். அந்த இரகசியத்தை அவன் கண்டு கொண்டான். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜீவிக்க அவன் கண்டு கொண்டான். 26. பழைய ஏற்பாட்டில், அந்தச் சபைக் கூட்டம் எவ்வாறு வானத்தின் அப்பத்தினால் போஷிக்கப்பட்டார்கள். மூன்று விதமான சுற்றுச் சூழலில் அவர்கள் வாழ்ந்தார்கள். பிரகாரத்தில் மன்னா விழுந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் மன்னாவைப் புசித்தார்கள். மற்ற இடத்தில் மன்னா பெய்து அவர்கள் எப்படிப் புசித்தார்களோ, அது போலவே அவனும் அதே மன்னாவைப் புசித்தான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உடன்படிக்கைப் பெட்டியில் பிரகாரத்தின் உள்ளே குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்ட மன்னா பழையதாய்ப் போகவில்லை. அவ்வாறு வைக்கப்படவில்லை என்றால், அது பழையதாய்ப் போய் விடும். அதை மாவாக்கி, கேக் வகைகளைச் செய்து உண்டு முடிக்கா விட்டால் அது காலை ஒன்பது மணி வரைக்கும் கூட இருக்காது கெட்டுப் போகும். சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு, போதுமான மன்னாவை சேகரித்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் பசியாயிருக்க வேண்டும் என்பதைப் பார்க்கிறோம். மேலும், இன்றைக்கு இருக்கும் ஜனங்களின் நிலைமையும் அது போன்றதே; அவர்கள் மைதானங்களில் விழும் துணிக்கைகளைப் பெறுகிறார்கள். எழுப்புதல் கூட்டங்களுக்குச் சென்று, மகத்தான நேரத்தைக் கொண்டு உள்ளனர். முதலாவது என்ன சம்பவிக்கும் தெரியுமா-? சிறிது கழித்து மற்றொரு எழுப்புதல் வருவதற்கு முன், மறுபடியும் உலகத்திற்குள் திரும்பிச் சென்று விடுகின்றனர். 27. கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட மனிதன் என்னைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அது முற்றிலும் சரியே; அவரை நான் நேசிக்கிறேன். அது ஒரு மாய்மாலம் என்று கூறவில்லை; இதைச் சொல்வதற்குக் காரணம், அது உண்மையாகும். நசரீன் ஜனங்களாகிய உங்களுடைய ஜான் சர்ச் என்ற அந்த மனிதன்... அவர் சொன்னார். அவர் தெய்வீக சுகமளித்தலுக்கு விரோதமாக எழுதினார். "அவர்களில் முக்கியமான மனிதர் திரு.பிரன்ஹாம்” என்று எழுதியிருந்தார். "அந்த மனிதனை என் ஜீவிய காலத்தில் ஒருபோதும் சந்தித்ததில்லை” என்றும் எழுதியிருந்தார். ஒரு அறிவுள்ள மனிதன், அவருடைய வாழ்நாளில் ஒரு போதும் (பார்க்காத) பேசாத, மனிதனைப் பற்றி அவ்வாறு எழுதுவதை எண்ணிப் பார்க்கிறேன். அவரிடத்தில் ஏதோ தவறுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. நம்முடைய நியாயப் பிரமாணம், "முதலாவது அவனுடைய வாக்குமூலம் என்ன என்பதைக் கேட்காமல், அவனை நாம் எவ்வாறு நியாயந்தீர்க்க முடியும்-?” எனக் கூறுகிறது. ''அந்த மனிதனை அறியேன், அவருடைய பேச்சைக் கேட்டதில்லை; என் வாழ்நாளில் அவரைப் பார்த்ததில்லை. ஆனால் ஒரு மனிதன் என்னிடத்தில் வந்து, அதை எழுதின மனிதன் அங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று என்னிடம் கூறினார். அவர் பிராஸ்டேட் (சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதி - மொழி பெயர்ப்பாளர்) வியாதியுடையவராய், சுகம் பெறுவதற்காக நான் அவருக்காக ஜெபிக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். “ஒரு முறை நான் சுகமாக்கப்பட்டேன்' என்றும் கூறினாராம். அந்தக் கதையை அவர் சொன்னார். அவர், 'ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன், பின்னால் முன்மாடத்தில் அமர்ந்திருந்தேன்' என்று கூறினார். 'அது திரு.பிரன்ஹாம் நடத்திய கூட்டம்' என்றார். 'ஒரு நொடிப் பொழுதில், ஒரு வினோதமான உணர்வு என்னில் வந்ததை உணர்ந்தேன்' என்றும் கூறினார். 'பிறகு அந்த மனிதன், அவர் பிரசங்கிக்கும் இடத்திலிருந்து திரும்பிப் பார்த்து, 'அங்கு உட்கார்ந்திருக்கும் மனிதன் இன்னார், இன்னார் என்றும், ஒரு குறிப்பிட்ட மனிதன், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வருகிறார், பிராஸ்டேட் நோயிலிருந்து அவர் சுகம் பெற வேண்டும் என்று ஜெபிக்கிறார்' என்றும், 'அவர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு, இப்போது விசுவாசிப்பாரானால், அவர் சுகமாக்கப்பட்டவராக வீட்டுக்குச் செல்லலாம்' என்றும் கூறினார். 'ஏதோ ஒன்று என் மேல் விழுந்தது, என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் அப்படிப்பட்ட ஓர் உணர்வைப் பெறவில்லை' என்றும் கூறினார். 'ஒரு வருடம் முழுவதும் அது என்னை உபத்திரவப்படுத்தவில்லை; அது மறுபடியும் வந்திருக்கிறது' என்றார்” என்று கூறினார். திரு. சர்ச், “அப்படியானால், திரு.பிரன்ஹாம் ஒரு பொய்யர் என்பதை அது காட்டுகிறது என்பதை நீங்கள் காணவில்லையா-?. தேவன் ஒரு மனிதனைச் சுகப்படுத்துவாரானால், தேவன் அவனை வாழ் நாள் முழுதும் சுகமானவனாக வைத்திருப்பாரே-?'' என்று கூறினார். திரு.சர்ச் அவர்களே, “சில்வர் ஹில்ஸ் மைதானத்தில் நடக்கும், எத்தனை கூட்டங்களுக்கு வந்திருக்கிறீர்கள், எல்லா நஸரீன்களும் இந்த வருடத்தில் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள். அதற்கடுத்த வருடத்தில் மற்றொரு கூட்டத்தைப் பரிசுத்தப்படுத்துகிறீர்கள்-? தொடக்கத்திலேயே அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. அப்படியானால் தேவன் அவர்களுக்கு நிஜமாக்கப்பட மாட்டாரே” என்று எண்ணினேன். பாருங்கள்-? 28. தெய்வீக சுகமளித்தல், பரிசுத்தமாகுதல் மற்றும் தேவனுடைய வல்லமை, இவைகள் அனைத்தும் உங்களுக்குள் விசுவாசம் இருக்கும் மட்டும் நிலைத்து நிற்கும். உங்கள் விசுவாசம் தோல்வி அடையும் போது, உங்கள் அனுபவமும் உங்களை விட்டுக் கடந்து சென்று விடும். அந்தப்படி கல்வாரியில் கிறிஸ்து செய்து முடித்த கிரியையில் எளிமையான நம்பிக்கை கொள்ள வேண்டும். உன்னுடைய சாட்சி சரியானதாய் இருக்கும் மட்டும் நீ பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறாய். பரிசுத்தமான ஜீவியம் ஜீவித்து, தேவன் உன்னை பரிசுத்தப்படுத்தினார் என்று விசுவாசிக்கு மட்டும், நீ பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறாய் அவருடைய கிருபைக்குள்ளும், இரக்கத்தின் ஐசுவரியத்திற்குள்ளும் இருக்கும் போது, நீ பரிசுத்தமாக்கப்படுகிறாய். நீ சுகத்தை ஏற்றுக்கொள்ளும் போது, சுகமாக்கப்பட்டு விட்டேன் என்று விசுவாசித்து - அவ்வாறே விசுவாசத்தில் செல்லும் போது, நீ விசுவாசிக்கும் அளவும் சுகம் பெற்றவனாக இருக்கிறாய். நீ சந்தேகம் கொள்ளத் தொடங்கும் போது... இக்காலை வேளையில் இங்கு அமர்ந்திருக்கும் ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துளி அளவு கூட அவனிடத்தில் வியாதியில்லை. அவன் இருதயத்தில் அவன் ஒரு நோயாளி என்று எண்ணத் தொடங்கட்டும், அவர்கள் அவனை கட்டிடத்தை விட்டு வெளியே தூக்கிச் சென்று விடுவார்கள். உன்னுடைய விசுவாசத்தின்படியே உனக்கு நடக்கும். அது கிறிஸ்தவ விஞ்ஞானம் அல்ல. அது மனது சம்மந்தமானது என்று நான் பொருள் கொள்ளவில்லை; ஆனால் பாருங்கள், அது நீங்கள் வாழும் சுற்றுச் சூழலையும் பொருத்தது. 29. இப்போது, நாம் சற்று நேரம் இந்த மனிதனைக் குறித்து பேசப் போகிறோம், அப்படியானால் நான் ஒரு சாட்சியைக் கொடுக்கப் போகிறேன்..... இந்த மனிதனாகிய எலியா, மகத்தான தீர்க்கதரிசி அப்படிப்பட்ட நிலையான சுற்றுப்புற சூழலில் வாழ்ந்தார். அவர் நசரேய பிறப்பாய் அழைக்கப்பட்டவர். “எல்லா வரங்களும், அழைப்பும் மனந்திரும்புதல் இல்லாமலேயே உண்டாகிறது”. அது ஒன்றுமேயில்லை. உன்னால் ஒரு மயிரைக் கறுப்பாகவோ அல்லது வெண்மையாக்கவோ முடியாது; உன்னுடைய உயரத்தில் ஒரு அங்குலத்தைக் கூட்டவும் முடியாது. நாம் மாமிச சிந்தை உடையவர்களாய் தேவன் நம்மைச் செய்யும்படி அழைக்காத ஒன்றைப் போலியாகச் செய்ய முயற்சிக்கிறோம். தேவன் அக்காரியத்தை செய்யும்படி நாம் அழைக்கப்படாமல் இருக்கையில், அவ்வாறு ஒன்றைப் போல் இருக்க முயற்சி செய்வோமானால், அதில் நாம் முற்றிலும் தோல்வி உற்றவர்களாய் இருப்போம். ஒரு மனிதன் தன்னை ஒரு ஸ்திரீயைப் போல் மாற்றிக் கொள்ள முயற்சி செய்வானேயானால், அது போல ஒரு ஸ்திரீபுருஷனைப்போல மாற்றிக்கொள்ள முயற்சி செய்வாளேயானால், அதை உன்னால் எப்படிச் செய்யக் கூடும்-? நான் ஒரு ஸ்திரீயைச் சந்தித்தேன். ஒரு ஸ்திரீயை, ஆண் ஆக்குவதற்கும், அல்லது ஒரு ஆணைப் பெண் ஆக்குவதற்கும் அது என்னவாக இருந்தாலும் ஒரு அறுவை சிகிச்சை நடத்த வேண்டுமாம். இது ரோம், மற்றும் இத்தாலியில் நடந்தது. அங்கே அவள் ஒரு ஸ்திரீயாக இருப்பதை அவமானமாகக் கருதினாள். எவ்வளவு குடிக்க வேண்டுமோ அவ்வளவு குடித்தாள். தெருக்களில் அங்குமிங்குமாக சுற்றினாள்; இது வரை கண்டிராதவைகளிலேயே அது அவ்வளவு பயங்கரமான சாட்சியாக இருந்தது. 30. கவனியுங்கள், தேவன் நீ எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அதிலிருந்து ஒன்றையும் வித்தியாசமாக உன்னால் மாற்றிக் கொள்ள முடியாது. ஏதாவது ஒன்றைச் செய்வீர்களானால் அது போலியாகும். ஆகவே உன்னுடைய மனந்திரும்புதல் என்பது, ஏதோ ஒன்றிற்குப் பின்னால் உன்னை மறைத்துக் கொள்வதோ, அல்லது உன்னை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கிக்கொள்ள முயன்றாலோ, ஒரு மாய்மாலக்காரனுடைய பாகமாக நீ நடிக்கிறாய். அவ்வளவே. உண்மையாகவே, கிறிஸ்து உன் ஜீவியத்தில் வந்து, உன்னை மாற்றி, ஒரு ரம்மியமான சூழ்நிலைக்கு கொண்டு வரவில்லையென்றால், அதுதான் வித்தியாசத்தை உண்டாக்குகிறதாய் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் நாம் அநேக அமைப்புக்குள்ளாகக் கடந்து செல்கிறோம், அவ்வாறு சென்று, அவர்கள் இதை, அதைச் செய்கிறார்கள் என்று கூறுகிறோம். ''என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன், நித்திய ஜீவனை அடைவான்” என்று இயேசு கூறினார். பாவனை விசுவாசியல்ல, முற்றிலுமாக ஏதோ ஒன்று சம்பவித்தது, இருதயத்தில் ஏற்பட்ட மனமாற்றம், அது உன்னை வேறு மனிதனாய் மாற்றி, வேறொரு பரிமாணத்திற்குள் உன்னைக் கொண்டு வந்தது. மனிதர்கள், கிறிஸ்தவர்கள், ஸ்திரீகள், புருஷர்கள், வாலிபப் பையன்கள், பெண்கள், அப்படிப்பட்ட இடங்களில் வாழ்ந்தவர்கள் எல்லாம் தவறாகப் புரிந்து கொண்டார்கள். ஏனென்றால், உலகப்பிரகாரமாக வாழ்ந்த ஜனங்களின் மத்தியில், அவர்களின் இயற்கையான வாழ்வுக்கு, இது வித்தியாசமாகக் காணப்பட்டது. நாம் அனைவரும் அப்படிப்பட்ட சூழலில் வாழ வேண்டும் என்று நிச்சயமுடையவனாக இருக்கிறேன். 31. கவனியுங்கள், பிரதான ஆசாரியன் ஷெக்கினா மகிமையின் கீழ் இருந்த அதே மன்னாவைப் புசித்தது போலவே, ஜனங்களும் பூமியில் பெய்த மன்னாவைப் புசித்தார்கள். பூமியில் கிடந்த மன்னா உலர்ந்து போயிற்று. ஆனால் அந்த மறைவான இடத்தில் வைக்கப்பட்ட மன்னா ஒரு போதும் உலர்ந்து போகவில்லை. நீண்ட வருடங்களாக, ஒரு காலம் வரைக்கும் அழியாமல் இருந்தது. அங்கு நடந்து சென்ற ஒரு மனிதன், திரைக்கு அப்பால் பிரதான ஆசாரியன் சென்ற போது, அந்தத் திரை பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரித்தது; அங்கே அவன் நடந்த போது, அந்த திரைச் சீலை கீழே விழுந்து அவனை மூடிக் கொண்டது. அவ்வாறு விழும் போது உண்டாகும் ஓசையின் மூலமாகவும் அது உறுதிப்படுத்தப்பட்டது. முழு உலகத்திற்கும், சுற்றுப்புறத்திற்கும் முற்றுமாக அவன் அடைக்கப்பட்டு விடுகிறான். அங்கே வெளி உலகம் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது; ஆனால் தேவனுடைய பிரசன்னத்தில் ஜீவிக்கிறான் என்பது மட்டுமே அவனுக்குத் தெரியும். ஷெக்கினா மகிமைக்குள் நடந்து சென்ற ஒரு ஸ்திரீயோ அல்லது ஒரு மனிதனோ அவனுக்குப் பின்னால் முழு உலகமும் மூடப்பட்டிருக்கிறது. பிசாசு என்ன கூறினாலும் சரி, அதற்கு உன்னுடைய கவனத்தைச் செலுத்தாதே. அவன் ஒரு வித்தியாசமான சூழலில் வாழ்கிறான். ஆரோனுடைய கோல் வைக்கப்பட்ட அந்த இடத்தில் வாழ்கிறான். அது ஒரு உலர்ந்த தடியே தவிர வேறொன்றும் இல்லை; அது ஒலிவ மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். ஆனால் ஒருமுறை தேவனுடைய பிரசன்னத்தில் வைக்கப்படும் போது, அது தொடக்கத்தில் என்னவாக இருந்ததோ அது போல் அது துளிர்விட்டது. ஒரு நாள் இரவிலேயே துளிர்த்துப் பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. 32. அது போலவே, ஒரு அவிசுவாசியோ அல்லது ஒரு ஒரு பாவியோ, பரிசுத்த ஆவியின் மூலமாக சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்திற்குள் கொண்டு வரப்படும் போது, அங்கேயே, அப்போதே அவன் புதிய சிருஷ்டியாகி விடுகிறான். அவனுடைய ஜீவியம் கனி நிறைந்ததாகவும் புத்துணர்ச்சி பெற்றதாகவும், ஜீவன் அவனுக்குள் வருகிறதுமாய் இருக்கிறது, தேவனுடைய ஒரு குமாரனாக அவன் முன் குறிக்கப்பட்டதால், அவன் கனி கொடுக்கிறான். அவன் மரத்திலிருந்து எடுக்கப்பட்டான். ஆகவே அவன் ஒரு ஒலிவ மரத்தின் கிளையாக இருக்கிறான். அவன் அந்த மரத்திலிருந்து எடுக்கப்பட்டவன். ஆனால் பாவிகளும், அனல் அற்ற குளிர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட சபை உலர்ந்த கிளைகளில் இருந்து இயற்கைக்கு மேம்பட்ட தேவன் ஒருவர் இருந்தார்; ஆகவே அக்காலத்தில் இவர்களும் ஜீவனைப் பெற்று இருந்தார்கள் என்ற நினைவு மட்டும் உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், அவரை நீ விசுவாசித்து, அவருடைய பிரசன்னத்தில், உன்னைக் கிடத்துவாயானால், அதே கிரியைகளை உன்னிலும் பிறப்பிப்பார். நீங்களும், தேவனால் பிறந்த குமாரர்கள், குமாரத்திகள் என்று உணர்ந்து, ஆவிக்குரிய கனிகளைக் கொடுப்பீர்கள். ஆனால் ஷெக்கினா மகிமைக்கு வெளியே, மைதானத்தில் அதை உங்களால் செய்யக்கூடாது; ஆனால் அவைகளை இங்கே, உள்ளே இந்த மறைவான இடத்தில் தான் செய்ய வேண்டும். 33. வெளிப்பிரகாரத்தில் இருக்கக்கூடிய மனிதன், அவன் பகல் வெளிச்சத்தில் நடக்கிறான். சில நாட்களில், இப்போது இங்கிருப்பது போல் மழை பெய்யும். மற்ற நாட்களில், சூரியன் பிரகாசிக்கும் இரவு நேரங்களில் இருளும் புயலுமாக இருக்கும். அவன் அநேக மேடு பள்ளங்களை உடையவனாக இருப்பான். அப்படித் தான் ஜனங்களைப் பார்க்கிறீர்கள். ''ஓ, தேவனுடைய நல்ல மன்னாவைப் புசிக்கிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அது சரியே. ஆனால் அவர்கள் ஜீவிக்கிற இடம் எது-? அவர்கள் அங்கே புசிக்கக் கூடாத மன்னாவைப் புசிக்கும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு மனிதன், பலிபீடத்தில் இருக்கும் அந்த மனிதன் வேறொரு வெளிச்சத்தைப் பெற்றவனாக இருக்கிறான். சிறிய விளக்குகளாக, ஏழு பொன் குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அது சில நேரங்களில் எரியும் போது குறைந்த வெளிச்சத்தைக் கொடுக்கும், சிம்னியில் புகை பிடிக்கும். ஒரு விளக்கு எரியும் போது புகை விடும் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு ஒரு மனிதன் வரும் போது, அவன் வருகிற சபையானது, பிரகாரத்திற்கு வெளியே, குளிரடைந்த உறுப்பினர்களைக் கொண்ட சபையாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் ஒரு நல்ல ஜீவியம் செய்ய வருகிறான், உலகத்தின் காரியங்களுக்குத் தன்னைப் பிரித்துக் கொள்கிறான்... ஆனால், அவ்வாறு இருந்தும், அவன் ஒளி மங்கி, புகை விடும் ஒரு செயற்கை வெளிச்சத்திலேயே ஜீவிக்கிறான். ஆனால், அதே மனிதன், தேவனுடைய பிரசன்னத்திற்குள், மகா பரிசுத்த ஸ்லத்திற்குள் அவன் நடந்து செல்லும் போது, அவனுக்குப் பின்னால், திரைச் சீலை விழுமானால், ஒவ்வொரு நாளும் அவன் புசிக்கத்தக்கதாக, வாரத்தின் ஒவ்வொரு மணி வேளையிலும் அவன் புசிக்கத்தக்கதாக அங்கே மன்னா வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே தானே அவன் ஷெக்கினா மகிமைக்குள் இருக்கிறான். அங்கே, சிறகுகளை உடைய கேருபீன்கள், மகத்தான அக்கினிஸ்தம்பம் அங்கே இருக்கும், ஷெக்கினா மகிமை அங்கு தங்கியிருக்கும். அதன் கீழே அவன் ஜீவிக்கிறான்; எல்லா நேரங்களிலும் ஒரு உண்மையான, பழுதற்ற கிறிஸ்தவனாக இருப்பான்; அவன் வேறொன்றாக இருக்க முடியாது. 34. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிற மனிதனும், ஸ்திரீயும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டார்கள். அதை நீங்கள் பார்க்கிறீர்களா-? அவர்கள் வினோதமானவர்கள் ஆவார்கள். அவர்கள் உலகத்தின் காரியங்கள் எதையும் கேட்க மாட்டார்கள். அப்படியே அவர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், அவைகளுக்குக் கவனத்தைச் செலுத்த மாட்டார்கள். அப்படியே கடந்து சென்று விடுவார்கள். அவைகளில் தேவன் ஒரு படிப்பினையையும் வைப்பதில்லை. எதேச்சையாக தேவன் அவ்விடத்திற்கு வருவதில்லை. ஜெபம் என்பது - அது ஒரு வேளை என்பதாக இருக்காது. ஜெபம் என்பது அவ்வளவு உண்மையுள்ளதாக இருக்க வேண்டும். ஜெபம் என்பது நாம் தேவனிடத்தில் பேசுவதாகும். ஜெபம் என்பது சும்மா முழுங்கால் படியிட்டு, கண்களை மூடிக்கொண்டு, துணிகளை சலவை செய்வது, அல்லது வேலை செய்கிற இடத்திலுள்ள வேலை காரியங்களை சிந்தித்துக் கொண்டிருப்பதல்ல. அவ்வாறு பலவித சிந்தனைகளில் இருந்து கொண்டு, “கர்த்தாவே, எனக்கும் ஜானுக்கும் உதவி செய்யும், மற்றும் செல்வி ஜோன்ஸை சுகப்படுத்தும், இன்னும் இப்படி பலவாக” என்று ஜெபிப்பதல்ல ஜெபம். அது, திரும்பத் திரும்ப சில சொற்களைக் கூறுவதாகும். ஆனால் ஜெபம் என்பது, நீ தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறாய் என்பதை உணர்ந்து, அப்படிப்பட்ட சூழலுக்குள் நீ வர வேண்டும். அப்படியானால், நீ மிக ஆழமான உத்தமத்தில் கடந்து செல்கிறாய் என்று பொருள். முதலாவது ஜெபம் என்பது அவரை ஆராதிப்பதாகும்; "ஓ, யேகோவா தேவனே, உம்மை எவ்வளவாக நான் நேசிக்கிறேன்” என்பதாக இருக்கும். அதைப் பார்க்கிறீர்களா-? அப்படியானால், ஆராதனை ஜெபத்திற்குப் பிறகு, உத்தமமான இருதயத்தோடு கேட்பதற்கு வருகிறாய். “என்னில் நீ நிலைத்திருந்தால்”, என்பதாக அது இருக்கிறது. இன்றிருக்கிற உலகம் என்னும் திரைக்குப் பின்னால் போகாதே. இங்கும் அங்குமாக உலகத்தின் காரியங்களில் சுற்றித் திரியாதே. இந்த இரவில் உள் திரைக்குள் வர பிரயாசப்படு. "நீ என்னில் நிலைத்திருந்தால், என் வார்த்தை உன்னில் வாசமாயிருக்கும்...'' வேறு வழியில் சொன்னால், நீ ஆரோனுடைய கோலாக இருந்தால், பொற்கிண்ணத்தில் வைக்கப்பட்ட மன்னாவின் மூலமாக, ஷெக்கினா மகிமைக்குள் இழுக்கப்படுவாய். அங்கே மன்னாவை எப்போது வேண்டுமானாலும் புசிப்பாய்... உன் ஆத்துமா புத்துணர்ச்சி பெற்று, பூத்துக் கனி கொடுக்கும். ''நீ என்னில் நிலைத்திருந்தால், என் வார்த்தை உன்னில் வாசமாயிருக்கும். அப்போது கேட்கப்படும் எதுவும் உனக்குக் கொடுக்கப்படும்.” 35. பெந்தெகொஸ்தே சபை, மெத்தோடிஸ்ட் சபை, பாப்டிஸ்டு சபை இப்படி எல்லா சபைகளும் தோல்வியுறுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அது தேவனுடைய கிருபையில் நிலைத்து நிற்காததினால் ஏற்படும் தோல்வியாகும். இன்றிரவு, நீங்கள் சத்தமிடலாம், கரங்களைத் தட்டலாம், இருக்கைகளின் இடைவெளியில் நின்று ஆடலாம், அந்நிய பாஷையில் பேசலாம். அது வரங்கள். ஷெக்கினா மகிமையில் வாசமாயிருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாத பட்சத்தில் வரங்களினால் நன்மை உண்டாகாது. பாருங்கள்-? இந்தக் காரியங்களெல்லாம் அருமையானது தான். அவைகளுக்கு விரோதமாக சொல்லுவதற்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை. அவைகள் தேவனால் உண்டானவைகள். சத்தமிடுவதும், கர்த்தரை ஆசீர்வதிப்பதும் அருமையானதாகும். அந்நிய பாஷையில் பேசுவது, அல்லது பாஷைகளை மொழி பெயர்ப்பது, அல்லது, பாஷைகளை வியாக்கியானம் செய்வது... எல்லாம் ஒன்று தான்... ஆனால்... சுகமாக்கும் வரம், தீர்க்கதரிசனங்கள், இவைகள் எல்லாமும் அதிசயமானவைகளே. ஆனால் அவைகளால் நன்மை ஒன்றுமில்லை; அது கனி கொடுக்காது. சரியானவைகளைப் பிறப்பிக்காது. ஷெக்கினா மகிமையில் வாசமாயிருந்து, உன்னைச் சுற்றிலும் ஒரு தெய்வீகப் பிரசன்னத்தை உருவாக்கிக் கொள்வது வரைக்கும் வரங்களால் ஒரு நன்மையும் இல்லை. ஆகவே தான், புருஷர்களும், ஸ்திரீகளும் இக்காரியங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை, ஏனென்றால், இங்கிருந்து அவர்கள் சென்று, தேவன் சபித்தது எதுவோ அவைகளில் இருந்து ஆசீர்வாதத்தைத் தேடுவார்கள். அல்லது தேவன் ஆசீர்வதித்தவைகளை சபிப்பார்கள். தேவனுடைய சித்தம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள, தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பின், உலகம் உன்னைக் குறித்து என்ன கூறுகிறது என்பதை நீ கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தேவன் உன்னைக் குறித்து என்ன நினைக்கிறார் என்பதே காரியமாகும். அப்படியானால், நீ தேவனுடைய பிரசன்னத்தில் ஜீவிக்கிறாய். 36. இந்த தீர்க்கதரிசனம் உண்டான நாட்களில், அல்லது அந்தத் தீர்க்கதரிசியின் நாட்களில், தேவன் ஒரு போதும் ஒரு சத்தத்தை உடையவராகவோ, அல்லது பூமியில் எங்கோ ஓரிடத்தில் அவருடைய வாயாய் இருக்கும்படி ஒரு மனிதனைக் கொண்டிராமல் இருந்தது இல்லை. எலியா அவருடைய வாயாய் இருந்தான். எனக்குத் தெரிந்த வரை, இஸ்ரேல் பின்வாங்கிப் போன கால கட்டத்தில், அவர்கள் பாரம்பரியத்தைப் பின்பற்றி, குளிரடைந்து பின்வாங்கிப் போனார்கள். ஏனென்றால் நமக்கு இங்கே நிலையான குடியிருப்பில்லை என்பதையே அது காட்டுகிறது நண்பர்களே. ஆனால் வருகிறதான அந்த மேலான நகரத்தையே நாம் விரும்புகிறோம். சமீபத்தில் நான் நின்று கவனித்தேன். உங்களுக்குத் தெரியுமா-? நான் ஒரு குத்துச்சண்டை வீரனாக இருந்தேன். சண்டை இட்டேன். 15 குத்துச்சண்டை போட்டியில் வென்றுள்ளேன். (பெருமையாய் இதைக் கூறவில்லை, அதைக்குறித்து நான் வெட்கப்படுகிறேன்.) 15 குத்துச் சண்டை போட்டிகளில், ஒன்றில் கூட நான் தோல்வியைச் சந்தித்ததில்லை. அவைகளில் 9 போட்டி, தோல்வியுற்றால் அதே சுற்றில் வெளியேற வேண்டும். நான் மிகவும் திடகாத்திரமான, நரம்புகள் முறுக்கேறி சதைப்பற்றுடையவனாய், கருத்த முடி தோளில் தொங்க விட்டவனாய் இருப்பதைக் காட்டும் படங்கள் என்னிடத்திலிருந்தன. அதைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய சிறிய மகள் உள்ளே வந்து, அறையில் வைத்திருந்த அந்தப் படங்களைப் பார்த்தாள். “அப்பா, நீங்கள் வழக்கமாகக் காட்சியளிப்பது போல, படத்தில் இல்லை” என்று கூறினாள். உண்மை, அப்படி நான் காணப்படவில்லை. ஏனேன்றால், இங்கே நமக்கு நிலையான நகரம் இல்லை; இந்த அழிவுக்குரிய சரீரம் மறைந்து போகும். அங்கே நான் பலசாலியாக இருந்தேன், வயது ஆக, ஆக கொழுப்புச் சத்து கரைந்து விடுகிறது. ஒன்று நினைவுக்கு வருகிறது; ஒரு பெரிய மரத்தின் அருகில் அடிக்கடி நான் நிற்பது வழக்கம்; அதற்குப் பெரிய பெரிய கிளைகள் இருந்தது; அது என்றென்றும் நித்திய, நித்தியமாக ஜீவித்திருக்கும் என்று எனக்குள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால், இன்றோ அது உலர்ந்து கொண்டிருக்கிறது. 37. நீண்ட காலத்திற்கு முன்பு நான் ரோமில் இருந்தேன். ரோமாபுரி ஒரு காலத்தில் உலகத்தையே ஆண்டது. அந்த மகத்தான நகரம் இப்போது ஒன்று மற்றதாகி விட்டது. அதன் அழிவைக் காண வேண்டுமென்றால், பூமியில் முப்பது அடி ஆழம் வரைத் தோண்ட வேண்டும். இன்று உலகத்திலேயே மிகவும் பலவீனமானதும், அழிந்து கொண்டிருக்கிறதுமான நகரங்களில் இதுவும் ஒன்று. தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள முடியாதபடி இருக்கிறது. கிரேக்க நாட்டின் அத்தேனே பட்டணத்தில் இருந்தேன்; அங்கே ஒரு காலத்தில் வேறொரு மகத்தான சாம்ராஜ்ஜியம் இருந்தது; அப்படிப்பட்ட மகத்தான சாம் ராஜ்ஜியம் இருந்ததற்கான ஒரு அடையாளம் கூட இன்று காணப்படவில்லை. எகிப்தில், கெய்ரோவில் இருந்தேன்; பார்வோன்களின் சிங்காசனமாக எகிப்து தேசம் எல்லோராலும் அறியப்பட்டிருந்தது; உலகத்தையே ஆட்சி புரிந்தது. ஸ்பிங்ஸ் தவிர ஒன்றும் விடப்படவில்லை; எல்லாமும் அழிந்து விட்டது. ஒரு சில கூர்நுனிக்கோபுர கட்டிடங்கள் மட்டும் மீதியாக விடப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் உலகம் அறிந்த சாம்ராஜ்ஜியமாக அது இருந்தது. சகோதர, சகோதரிகளே, நம்முடைய மகத்தான அமெரிக்க தேசம், நம்முடைய மகத்தான பொருளாதாரம், இவைகள் எல்லாம் அதன் அஸ்திபாரத்திலேயே அழுகிக் கொண்டிருக்கிறது. அதற்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை இப்போதே பார்க்கிறேன். அழிவுகளோடு அழிவாக இவளும் அழிந்து விடுவாள். இன்று வாலிப அழகோடு, வாலிப சிவந்த கன்னங்களோடு வாலிப இருதயத்தின் மூடத்தனத்தோடு இருக்கிற வாலிப ஆண்களாகிய நீங்கள், வாலிபப் பெண்களாகிய நீங்கள் ஒரு நாள் எங்கோ ஓரிடத்தில் கல்லறையில் போட்டு மூடப்பட்டு விடுவீர்கள். ஏன்-? ஏனென்றால் அழிவுக்குரியது யாவும், அழியாமையைப் பெற்றுக் கொள்ள வழிவிட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு தேசமும் அழிய வேண்டும், மனிதனால் ஆளுகை செய்யப்படாமல், கிறிஸ்துவால் மட்டுமே ஆளுகை செய்யப்படும் ஒரு தேசம் வந்து கொண்டிருக்கிறது. 38. இஸ்ரேல் விழுந்தது. அது விழுந்து கொண்டிருக்கிறது. அல்லது, அது விழுந்து போவதற்கு சற்று முன்பு, இந்த மகத்தான - மகத்தான தீர்க்கதரிசி எழும்பினார், அவர் ஜனங்கள் மத்தியில் பைத்தியக்காரன் என்று எண்ணப்பட்டார். ஆனால் அவரோ தேவனுடைய பிரசன்னம் மாறாததாயிருக்கும் ஒரு சூழ்நிலையில் வாழ்ந்தார். ஏறக்குறைய தனித்து விடப்பட்டவராக, தனக்காக அல்லாமல் தேவனுக்காக சேவை செய்தார். அவரைக் குறித்து ஜனங்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். “அங்கே, அவரைப் பறவைகள் போஷிக்கின்றன என்ற கதையை நீ நம்புகிறாயா-?” என்று அவர்கள் பேசுவதை கற்பனை செய்து பார்க்கிறேன். “இந்த வித்தியாசமான, வினோதமான காரியங்களை யெல்லாம் விசுவாசிக்கிறாயா-?” நோவாவின் நாட்களில், “அந்தக் கனமழைக் கதையை விசுவாசிக்கிறாயா-? அந்தப் பைத்தியக்காரன் கூறுவது போல மேலேயிருந்து மழை எவ்வாறு பொழியும்-?” ஆனால் நோவாவோ, தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்தார். மனிதனுடைய ஆதிக்கத்தின் கீழ் அல்ல. பிறகு, ஒரு வேளை வந்தது. அங்கே ஒரு... சீரியா தேசத்தார் வந்து, ஒரு சிறிய பெண்ணை அவர்களுடைய தேசத்திற்குக் கொண்டு போய் விட்டார்கள். அங்கே புகழ் பெற்ற படைத் தளபதி இருந்தார். வேதம் சொல்லுகிறது அவன் மிகுந்த பலசாலி என்று. ஆனால் அவனோ ஒரு குஷ்டரோகியாயிருந்தான். 39. இவைகள் எல்லாவற்றிலும் - இன்றைக்கிருக்கிற இவ்வுலகத்தில், கென்டக்கியில் இருக்கும் இந்த ஓவன்ஸ் போரோ என்ற இப்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற, செல்வாக்குள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களை நான் அறிந்திருக்கவில்லை, இவ்வளவு பெரிய பட்டணம், அப்படிப்பட்ட பெரிய மனிதர்களை பெற்றிருக்கவில்லையென்றால், இது ஒரு நவீன் சோதோமாக மாறியிருக்கும், அப்படிப்பட்ட செல்வாக்குள்ள மனிதர்களைக் கொண்டு இருக்காவிட்டால். ஆனால் இத்தகைய செல்வாக்கு வாசமாயிராதபடிக்கு, அதை எங்கே விட்டு விட்டார்கள் என்பதையும், அது எவ்வகை ஜீவியத்தை உற்பத்தி செய்கிறது என்பதையும் அது பொறுத்ததாயுள்ளது. அரசியல் சம்பந்தப்பட்டது என்றால்... அவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லக்கூடாது; நமக்கு அரசியலும் மற்வைகளும் தேவையாயிருக்கிறது. ஆனால், அவர் யாராக இருந்தாலும், சரியான சூழலில் அந்தச் செல்வாக்கு பயன்படுத்தப்படுமானால், அவர் தன்னைத் தேவனுடைய பிரசன்னத்திற்குள் வைக்க வேண்டும். 40. கவனியுங்கள். நாகமான் மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன். ஆனால் அவனோ குஷ்டரோகியாயிருந்தான். இன்றைக்கும் அநேக ஜனங்கள், இதைச் சொல்வதற்கு நான் வருத்தப்படுகிறேன். மகத்தான மனிதர்கள், தேவனுடைய பிரசன்னத்தில் காத்திருக்காமல், பிரசங்க பீடத்திலிருந்து பேசப்படுகிற மனிதனால் உண்டாகும் இறைக் கோட்பாடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இன்னும் அவர்கள் குஷ்டரோகியாகவே இருக்கிறார்கள். "பக்தியின் வேஷத்தை தரித்தவர்களாய், தேவனுடைய வல்லமையை மறுதலித்தவர்களாய் இருக்கிறார்கள்.” அதிகாரத்தோடு பிரசங்கிக்கிற செல்வாக்குப் பெற்ற பிரசங்கிமார்கள், ஆனால் மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்று தெரியாதவர்களாய் - அல்லது இயற்கைக்கு மேம்பட்டவைகளை நம்ப முடியாதவர்களாய், அதைப் புரிந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறார்கள், இவைகள் யாவும் இல்லாமல், தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அதற்குக் காரண காரியங்களைக் கற்பிக்கிறார், ஏனென்றால், அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தில் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவருடைய பிரசன்னத்தில் ஒரு மனிதன் வருவானானால், அவன் தேவனுடைய குமாரனும், குமாரத்தியுமாக ஆக்கப்படுவான். பின்பு, அவனுடைய சுபாவம் தேவனைப் போலவே இருக்கும். இயற்கைக்கு மேம்பட்டவைகளை அவன் விசுவாசிக்கிறான். 41. ஆகவே, அவர்களிடத்தில் சிறு பெண் இருந்தாள். ஒருவேளை தேவனுடைய பிரசன்னத்தில் - செல்வாக்கின் கீழ் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவளாக இருக்க வேண்டும் - அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் அவள் வாழ்ந்திருந்தாள். இப்போது அந்தக் குழந்தையின் - சிறு பெண்ணின் உள்ளத்தில் உண்டான ஒரு சாட்சியின் தாக்கத்தை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். அவள் தன் எஜமானியையும், தன் எஜமானனையும் நேசித்தாள். ஒரு வேளை நாகமான் நல்ல இருதயமுடையவனாகவும், நல்ல பண்புகளைக் கொண்ட மனிதனாகவும் இருந்திருக்க வேண்டும். ஆகவே, அத்தகைய பண்புகளை அவள் அவனிடத்தில் பார்த்தாள்... நமக்கு தெரிந்திருக்கிறபடியும், சரித்திரத்தின்படியும், எலியா தீர்க்கதரிசி ஒரு போதும் ஒரு குஷ்டரோகியை சுகப்படுத்தினதில்லை, அவருடைய நாட்களில் ஒரு குஷ்டரோகி கூட சுகப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்தச் சிறு பெண்ணோ, இஸ்ரேல் தேசத்தில் செல்வாக்கோடு எழுப்பப்பட்டு வளர்க்கப்பட்டாள். இப்போது அவள் ஒரு அந்நிய தேசத்தில் இருக்கிறாள். அவள் தன்னை ஒரு விசுவாசியைப் போல் நடத்திக் கொள்கிறாள். அப்படி எல்லா நேரங்களிலும், நம்முடைய நடத்தை ஒரு விசுவாசியைப் போலவே இருக்கும்படியாய் நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய நிலைமை என்னவாக இருந்த போதிலும், ஒரு விசுவாசியைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். உனக்குள் இருக்கும் நம்பிக்கையைக் குறித்து பதிலளிக்க எல்லா நேரங்களிலும் ஆயத்தமாயிருக்க வேண்டும். இதைக் கவனிக்கிறீர்களா-? 42. இங்கே, கொஞ்ச காலத்திற்கு முன்பு, கீழே தெற்குப் பகுதியில், ஜெர்மானியர்கள் அல்லது டச்சுக்காரர்கள் டச்சுக் குடியிருப்புகளை ஏற்படுத்தினார்கள். ஆப்பிரிக்க தேசத்திலிருந்து நீக்ரோக்களைக் கொண்டு வந்தார்கள். அவர்களை அடிமைகளாக தெற்கு மாநிலங்களில் விற்றுப் போட்டார்கள். அவர்கள் அனைவருமே அடிமைகளின் முதலாளிகளின் சொந்த சொத்துக்களானார்கள். பகலின் உஷ்ணத்தில் கடுமையாக உழைத்தார்கள். சவுக்குகளால் அடிக்கப்பட்டு உடம்பெல்லாம் தழும்புகளைப் பெற்றார்கள். சில சமயங்களில் இரக்கமற்ற எஜமான்களால் கூட அப்படி நடந்தது. அவர்களின் சொந்த தேசத்திற்கு வெளியே, பாரம் சுமத்தப்பட்டார்கள். கவலைக்குள்ளானார்கள். அநேக சமயங்களில் அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்; வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களை வேலை செய்யும்படி நிர்ப்பந்தம் செய்வார்கள். ஒரு குறிப்பிட்ட பண்ணைத் தோட்டத்தில், நூற்றுக்கணக்கான அடிமைகளையுடைய, ஒரு பெரிய அடிமைகளின் உடைமைதாரர் இருந்தார். அந்தப் பெரிய பண்ணைத் தோட்டத்தில் வேலை செய்ய அவருக்கென்று இருநூறு அல்லது முந்நூறு அடிமைகள் இருந்தார்கள். அடிமைகளை வாங்கிக் குவித்து வைத்திருப்பார். அடிமைகளை வாங்குவதற்கென்று ஒருவர் அங்கே வந்தார். அவர், ''நான் உங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அடிமையை விலைக்கு வாங்க விரும்புகிறேன்” என்றார். "அவனுடைய நடத்தையைக் கவனித்தேன்”. "அவன் எப்போதும் நிமிர்ந்து நடக்கிறான், வேலை வாங்குவதற்கு நீர் அவனை அடிக்க வேண்டியதில்லை” என்றார். "அவன் எப்போதும், எதை வேண்டுமானாலும் செய்வதற்கு ஆயத்தமுள்ளவனாகவும், விருப்பமுள்ளவனாகவும் இருக்கிறான்” என்றார். “அவன் ஒரு திடகாத்திரமான மனிதனாகக் காணப்படுகிறான்” என்று அவர் கூறினார். “ஒருவேளை, மற்ற அடிமைகளுக்கு அவனை எஜமானாக நியமித்திருக்கலாம்” என்றார். அவர், “இல்லை, இவனும் அடிமை தான்” என்று சொன்னார். “ஒரு வேளை, சற்றே வித்தியாசமான உணவை அவனுக்கு சாப்பிடக் கொடுத்திருப்பீர்கள், அதனால் தான் அவன் வித்தியாசமாக நடந்து கொள்கிறான்” என்று சொன்னார். அதற்கு அவர், “இல்லை, மற்றவர்கள் சாப்பிடும் உணவையே இவனும் உண்ணுகிறான்” என்று கூறினார். அப்படியானால், "அவனை எது இப்படி வித்தியாசமாக நடந்து கொள்ளச் செய்கிறது” என்று கேட்டார். சகோதரர்களே, அதற்குப் பதில் இங்கே இருக்கிறது. “இல்லை, நானே, அவனைக் குறித்து அதிசயித்திருக்கிறேன். எப்போதும் நாடியைத் தூக்கி, தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, ஒரு போதும் மந்தமாக, அசதி உள்ளவனாகக் காணப்படாமல், எப்போதும் ஆயத்தமாயிருக்கிறான். பின்னாட்களில், அவன் ஒரு கோத்திரத்தின் இராஜாவினுடைய மகன் என்று தெரிந்து கொண்டேன். அவன் இப்போது, அயல் தேசத்தில் இருக்கிறான், அவன் தன்னுடைய வீட்டை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறான், அப்படியிருந்தும், ஒரு இராஜாவின் குமாரன் என்பதை நினைவு கூர்ந்தவனாகத் தன்னை நடத்திக் கொள்கிறான். மற்றவர்களின் பண்புகளை விட, தன்னுடைய பண்புகள் மிகச் சிறந்தது என்பதைக் காத்துக் கொள்கிறான். ஏனென்றால், தான் ஒரு இராஜாவின் குமாரன் என்பதை அறிந்திருந்தான்” என்று கூறினார். 43. இக்காலை வேளையில், கிறிஸ்தவ சபை எப்படி பலப்பரீட்சை, சவாலை சந்திக்கிறதாய் இருக்க வேண்டும். மற்ற மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியல்ல, கிறிஸ்தவ மார்க்கத்திற்காக சாட்சி கொடுப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது காரியமல்ல, நாம் அந்த இராஜாவின் குமாரர்களும், குமாரத்திகளுமாய் நடந்து கொள்ள வேண்டும். நம்முடைய நடத்தைகள், பண்புகள் எல்லாம் வியக்கத்தக்க விதத்தில் இருக்க வேண்டும். உலகத்தார்களைப் போல நாம் நடக்கக் கூடாது. அல்லது உலகத்தோடு வாழக் கூடாது. நம்முடைய தைரியத்தை, உயர்ந்த ஸ்தானத்தில் வைக்க வேண்டும். நாம் அந்நிய தேசத்தில் இருக்கிறோம். இந்த உலகத்தைக் குறித்து நமக்கு அக்கறை கிடையாது, அவர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் நமக்குக் கவலை கிடையாது. நாம் அந்நிய தேசத்தில், அந்நியரும், பரதேசிகளுமாய் இருக்கிறோம். ஆனால், இந்நாட்களில் ஒரு நாள், நம்முடைய குடியிருப்பாகிய வீட்டிற்குச் செல்லப் போகிறோம். ஆனால் இப்போது, நாம் பரதேசிகளாய் இருக்கிறோம். 44. இந்தச் சிறிய பெண் அதற்குச் மாதிரியாயிருக்கிறாள். “நான் தேவனை அறிவேன், என்னுடைய எஜமானன் நாகமான் என்னுடைய தேசத்திற்குப் போவாரென்றால், அவருடைய குஷ்டரோகத்தைச் சுகமாக்குவதற்கு, அங்கே எங்களுக்குத் தீர்க்கதரிசி உண்டு” என்று தன்னுடைய நாச்சியாரிடத்தில் கூறினாள். ஓ, என்னே, அந்தச் சிறு பெண்ணைத் தேவன் எவ்விதமாகப் பயன்படுத்தினார். அவள் அதை எப்படி அறிந்திருந்தாள்-? அதே காரியத்தைக் குறித்துத் தான் கடந்த இரவு பிரசங்கித்தேன். அதே சூழ்நிலை தான் அவளுக்கு ஓர் ஊக்கத் தன்மையைக் கொடுத்து, அவளுக்கு ஓர் உள்ளுணர்வைக் கொடுத்தது. இப்போது, கவனியுங்கள். அந்த வார்த்தைகளைச் சொல்வதற்கு, அவளுக்குள் இருந்த உள்ளுணர்ச்சியின் ஊக்கத்தன்மையே, அவளை அவ்வாறு நடத்தியது. எலியா அப்படிப்பட்ட வியாதியுடைய ஒருவனை சுகப்படுத்தினாரா என்பது நமக்குத் தெரியாது. அதற்காக அவர் எவ்வளவாய் ஜெபித்தாலும், அப்படிப்பட்ட வியாதியுடைய ஒருவர் கூட சுகம் பெறவில்லை. ஆனால் அவளோ, "நான் தேவனை அறிவேன், என்னுடைய எஜமானர் என்னுடைய தேசத்திற்குச் செல்வார் என்றால், அங்கே எங்களுடைய தேசத்தில் தீர்க்கதரிசி உண்டு” என்று கூறினாள். ஓ, இன்றைக்கு இருக்கிற நம்முடைய சபைகளில் இதை நாம் கூறுவோமானால், நான் கர்த்தரை முன்னிட்டுக் கூறுகிறேன், அப்படிப்பட்ட தாக்கத்திற்குள் நீங்கள் வந்தால், நானும் என்னுடைய சபையும் அப்படிப்பட்ட உணர்வுக்குள் வரவேண்டும், ஏனென்றால், நாம் "தேவன் சுகமாக்குகிறார்” என்பதை விசுவாசிக்கிறோம். தேவன் இரட்சிக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம், தேவன் பரிசுத்த ஆவியை அருளுகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். நான் வாழ்ந்த தேசத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்; அங்கே தேவன் இருக்கிறார். 45. இயற்கைக்கு மேம்பட்டவைகளை அறிமுகப்படுத்தும் ஒரு இடத்திற்குச் செல்வீர்களே ஆனால், உடனடியாக நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நாகமான் அவருடைய இராஜாவிடத்தில் அனுப்பப்பட்டார். அவர் வேறு தேசத்து இராஜாவுக்கு ஒரு நிருபம் எழுதினார்; அந்த நிருபத்தில், ''மெய்யாகவே அப்படிப்பட்ட மகத்தான காரியங்கள் தேசத்தில் நடை பெற்றுக் கொண்டு இருக்குமானால், அந்த இராஜா அதைக் குறித்து நிச்சயமாக அறிந்து இருப்பார். அங்கே ஒரு தீர்க்கதரிசி அந்தத் தேசத்தில் இருப்பார் என்றால், இராஜா அதை நிச்சயமாக அறிந்திருப்பார்” என்று எழுதியிருந்தது. நிச்சயமாக, மிக உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்கள் அதை அறிந்திருக்க வேண்டும். பாருங்கள், அது இன்னுமாய் எவ்வளவு மாமிச சிந்தையாய் இருக்கிறது. அந்தச் சிறிய பெண், அந்த இராஜாவைக் குறித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை; அவள் அந்தத் தீர்க்கதரிசியைக் குறித்தே பேசினாள். ஆமென். ஓ, அதைப் பார்க்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னே, அவள் அந்தத் தீர்க்கதரிசியைக் குறித்தே பேசினாள். ஒரு வேளை, ஒரு குஷ்டரோகி சுகமடைந்ததைக் கூட அவள் பார்க்கவில்லை. ஆனால், இயற்கைக்கு மேம்பட்டவைகளின், சூழ்நிலையின் கீழ் ஒருவர் வாழ்ந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். "அங்கே போவீர்கள் என்றால், ஏதோ ஒன்று சம்பவிக்கும்” என்று கூறினாள். 46. ஆனால், இங்கே அந்த ராஜா, அவனுடைய வழியில் சுற்றி வளைத்து எழுதுகிறான். அல்லது நாகமான் அந்த இராஜாவிடத்தில் போகிறான். நீங்களும் இன்று அப்படிப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள்... “நான் ஒரு குறிப்பிட்ட ஒரு சபையைச் சார்ந்தவன்' என்று கூறி.... கர்த்தரைக் கண்டடையும் இடத்தை அடையவில்லை... ஓ, என்னே-! அது அந்தச் சூழ்நிலையோடு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு காரியத்தையும் செய்யாது. கவனியுங்கள், அவன் இஸ்ரவேல் ராஜா இடத்திற்கு நிருபத்தைக் கொண்டு வருகிறான். அது இன்றைக்குள்ள நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. அந்தத் தேசத்தில் ஒரு தீர்க்கதரிசி இருப்பாரானால், அந்த தேசத்தில் சுகமாக்குதல் இருக்குமானால் அப்படிப்பட்ட மகத்தானவைகளை அந்தத் தேசம் அறிந்து இருக்கும். தேவன் எப்போதும் உயர்ந்த ஸ்தானத்தில் ஈடுபடுவதில்லை, நாம் ஒரு தனித்த ராஜ்ஜியத்தில் இருக்கிறோம். 47. நேற்று ஒருவரிடம் பலதார மணத்தைக்குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். பலதார மணத்தை இந்த தேசம் அனைத்தும் பின்பற்றினால் அது நன்றாயிருக்கும் என்றேன். ஆம், நன்றாயிருக்கும். மணமுறிவுகளில் உலகத்திலேயே நாம் முதலிடத்தில் இருக்கிறோம்; திருமணம் முடிப்பதும், திருமணத்திற்குள் திருமணம் செய்வதும் தொடர்கிறது. ஏனென்றால், உலகத்தின் மற்ற பாகங்களிலுள்ள மனிதர்களையும், கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு இழுக்க ஒத்துப்போக முயற்சிக்கிறோம். செம்மறியாட்டின் தன்மையை ஒரு பன்றிக்குள் வைக்க முடியாது. பலதார மணம் அவனுக்குச் சிறந்ததாக காணப்படுகிறது. அதை உங்களால் விசுவாசிக்க முடியாது, ஆனால், தேவன் பலதார மணத்தைப் பார்க்கிறார், அவர் என்ன செய்ய வேண்டுமோ, அதைத் துரிதமாகச் செய்யாமல் மன்னிக்கிறார். இப்போது, ஞாபகம் கொள்ளுங்கள். நான் பலதார மணத்தை விசுவாசிக்கிறேன் என்று கூறாதீர்கள். நான் அதை விசுவாசிக்கவில்லை. தேவன், மோசேயிடத்தில் என்ன கூறினார், மோசே என்ன சொன்னார், அல்லது பரிசேயர்கள் இயேசுவிடம் என்ன கூறினார்கள் என்பதை எல்லாம் நான் நினைவு கூருகிறேன். இயேசு, “மோசே, நீங்கள் தள்ளுதல் சீட்டைக் கொடுக்கலாம் என்று ஏன் கூறினார்-?" “உங்கள் இருதயத்தின் கடினத்தின் நிமித்தமே அவ்வாறு கூறினார்” என்று சொன்னார். சரியா-? ஆனால், ஆதி முதலாய் அவ்வாறு இருக்கவில்லை. இனியும் அவ்வாறு இருக்காது. அவர்களின் இருதயக் கடினத்தின் நிமித்தம் தேவன் அவ்வாறு செய்தார். ஆனால், பலதார மணம், அதன் மூலம் உண்டாகிற விவாகரத்து, இவைகள் இருக்கிற தேசங்களில், விவாகரத்து நீதிமன்றங்களில் ஜனக்கூட்டம் அலை மோதுகிறது. தாழ்ந்த நிலை. ஆனால் இங்கே, ஒரு தேசமாக ஆளுகை செய்ய நாம் முயற்சிக்கிறோம். ஏனென்றால், கிறிஸ்தவ தேசமாக இருக்கிறோம். கிறிஸ்தவ நாடு என்று பெயர் வைத்திருப்பதினால். அது கிறிஸ்தவ நாடாகி விட முடியாது. உங்களால் உலகத்தை தேவனுடைய பிரமாணங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. உங்களால் முடியாது. ஒரு பாவி குடிக்கிறான், அவனுக்கு விரோதமாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒரு பாவி விபச்சாரம் செய்கிறான், அவனுக்கு விரோதமாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதைச் செய்கிற பாவிக்கு விரோதமாக ஒன்றும் இல்லை. ஆனால் நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்றால், இப்படிப்பட்ட ஜனங்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, இவ்விதமான காரியங்களை செய்கிறார்களே என்பது தான். ஒரு பன்றி தன்னுடைய மூக்கைக் குப்பைக் கிடங்கில் நுழைத்து, பகலெல்லாம் அதை உண்ண விரும்பினால் உண்ணலாம்; அது அதனுடைய வேலை. ஏனென்றால் தொடக்கத்திலேயே அது ஒரு பன்றியாய் இருக்கிறது. ஆனால் ஆட்டுக்குட்டி அதைச் செய்யாது. ஒரு பாவியாய் இருப்பானானால், அவன் தொடக்கத்திலேயே பன்றியாய் இருக்கிறான். ஆனால், அந்தப் பன்றியை ஆட்டுக்குட்டியாக மாற்ற நீ முயற்சி செய்தால், அவன் மனமாற்றம் அடைய வேண்டும். அவன் வித்தியாசமான ஒரு சூழலுக்குள் வரவேண்டும். அவ்வாறு ஒரு சூழலுக்குள் அவன் வரும் போது, அவன் ஆசையில் இச்சையில் மாற்றம் ஏற்படும். அவனுடைய தன்மைகள் மாறும். இன்றைக்கு இருக்கிற வழி அதுதான். 48. ஆகவே அவன் இராஜாவிடத்தில் போகிறான். கையில் நிருபம் இருக்கிறது. அது அந்த ராஜாவிடத்தில் கொடுக்கப்பட வேண்டும். “அதைக் கொடுக்க விரும்பவில்லை” என்று கூற முடியாது. இப்போது பாப்டிஸ்டு சபையில் ஜனங்கள், “யாராவது வேலையில் சேர வேண்டுமானால், உங்கள் நிருபங்களை கொண்டு வாருங்கள், அல்லது நிருபத்தில் ஒரு எழுத்தைக் கூட மாற்றக்கூடாது; ஒரு உறுப்பையும் நீக்கக்கூடாது...'' என்று கூறுகிறார்கள். இப்படி ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்குக் கொண்டு வருவார்கள். அப்படிப் போலத் தான் நாகமானின் இராஜா தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி எழுதியிருந்தான். நாகமான் அந்த நிருபத்தை இஸ்ரவேல் இராஜாவிடத்திற்கு எடுத்துக் கொண்டு போனான். அது தேவனிடத்தில் என்ன காரியத்தைச் சாதித்து விடும்-? தேவன் சபைக்கு வந்து, உன்னுடைய நிருபத்தைப் பார்க்கப் போவதில்லை. பரலோகத்தில் அவரிடம் ஒரு புத்தகம் உண்டு; அதற்குப் பேர் ஜீவ புஸ்தகம். அந்த ஜீவ புஸ்தகத்தில் உன்னுடைய நாமம் இல்லையென்றால், உலகத்திலுள்ள ஒவ்வொரு சபையில் இருந்தும் ஒரு நிருபத்தை வாங்கிக் கொண்டு வந்தாலும் பயனில்லை; நீ இழக்கப்பட்டு விட்டாய். அது சரியா-? நீ அப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் வந்து, தேவனை நேசித்து வாழவில்லையென்றால், உன்னுடைய பெயர் ஒரு போதும் எழுதப்பட முடியாது. தேவன் அன்புள்ளவராக இருக்கிறார். அவரும் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். நீ குளிருள்ளவனாகவோ, கொடூரமானவனாகவோ, முரண்பட்டவனாகவோ இருந்து, தேவனை எங்கும் காண முடியாது. நீ அன்புடையவனாகவும், பிரியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். 49. கவனியுங்கள். இந்தச் சிறு பெண், அவனைத் தீர்க்கதரிசியினிடத்தில் போகும்படி சொன்னாள். ஆனால், அவனோ தீர்க்கதரிசி இடத்தில் செல்வதற்குப் பதிலாக, இராஜா இடத்தில் சென்றான். அந்த இராஜாவோவெனில், தெய்வீக சுகமளித்தலைப் பற்றிக் கொஞ்சம் கூட அறியாதவனாக இருந்தான்; அந்தக் குறிப்பிட்ட - குறிப்பிட்ட காரியத்தைக் குறித்து அவன் எதுவுமே அறிந்திருக்கவில்லை. ஏன், அந்தத் தேசத்தில் அற்புதங்களைச் செய்யக் கூடிய ஒரு தீர்க்கதரிசி இருப்பதை அவன் அறியாதவனாக இருந்தான். அவன் ஒரு இஸ்ரவேலனாக, விருத்தசேதனம் பண்ணப்பட்டவனாக இருந்தும், அவன் வாழ்ந்து வந்த சூழ்நிலை எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த சூழ்நிலையைப் போலில்லை. அவன் இந்த நிருபத்தைப் பெற்றவுடன், அவன் சென்று தன்னுடைய வஸ்திரங்களை எடுத்து அதைக் கிழித்துப் போட்டு, “மனிதனை சாவாமல் காப்பதற்கும், அல்லது அவனை மரித்தவனாக்குவதற்கும் நான் தேவனா-?” என்று கூறினான். மேலும் அவன், “இதை இங்கிருக்கும் அனைவருக்கும் (அவனுடைய மந்திரி சபை) அறிய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த மனிதன் என்னுடன் யுத்தம் செய்வதற்கு வகை தேடுகிறான்” என்று கூறினான். அதைக் கவனித்தீர்களா-? உலக மக்களை அது வெகுவாக உலுக்கிப் போட்டது. உங்களுக்குத் தெரியும். பாருங்கள், அவன் அப்படிப்பட்ட சூழலில்... இருப்பினும் தான் ஒருஇஸ்ரவேல் வம்சத்தான் என்று அறிக்கை செய்தான். ஆனால் அவன் உள்ளத்திலோ அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்று எண்ணினான். ஆனால், ஓ, தேவனுக்கு நன்றி, அங்கே ஒரு வயதான தீர்க்கதரிசி வனாந்திரத்தில், வித்தியாசமான சூழ்நிலையில் தேவனோடு வாழ்ந்து வந்தார். இராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டதைக் கேள்விப்பட்டார். ''உன்னுடைய வஸ்திரங்களை ஏன் கிழித்துக் கொண்டாய்-?'' என்று தீர்க்கதரிசி கேட்டார். “அவனை ஏன் என்னிடத்தில் அனுப்பவில்லை-?'' என்று கேட்டார். இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது அந்த இராஜாவிற்குத் தெரியவில்லை. அந்த இராஜா அதை அறிந்திருக்கவில்லை. 50. இயேசு கிறிஸ்து இன்னும் ஜீவனுள்ளவராயிருக்கிறார் என்று அறியாத ஜனங்கள் இன்றும் அனேகர் இருக்கிறார்கள். அவர் இப்போதும் ஆளுகை செய்கிறார் என்பதை அவர்கள் அறியாது இருக்கின்றனர். கல்வாரியின் இரத்தம் எல்லாவற்றிற்கும் போதுமானதாக இருக்கிறது என்பதை அறியாதவர்களாய் இருக்கின்றனர். பாருங்கள், உன்னுடைய சுகத்திற்காக, உன்னுடைய மீறுதல்கள் யாவையும் அவர் ஏற்றுக் கொண்டார். அது இன்றைக்கும் உண்மையாய் இருக்கிறது என்பதை அறியாது இருக்கின்றனர். இந்தக் காரியங்களைக் குறித்து அறிக்கை செய்ய, இன்னும் அநேக வேலைக்காரப் பெண்கள் நமக்குத் தேவை. நீங்களும் அவ்வாறு எண்ணவில்லையா-? அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்குள் செல்லுங்கள். உலகம் என்ன சொல்கிறது என்பதைக் குறித்து அது பயப்படாது. ஏனென்றால் அவர்கள் உலகத்தாரோடு பேசும் போது, அவர்கள் வேறு ஒரு சூழ்நிலையிலே இன்னுமாய் இருக்கிறார்கள். நீ ஒரு பாவியோடு பேசுகிறாய், ஆனால் அவன் இருக்கின்ற சூழ்நிலையில் நீ இல்லை. நீ மகிமையினால் மூடப்பட்டவனாய், ஷெக்கினா மகிமை உன்னை சூழ்ந்து கொண்டிருக்கும் போது, உலகத்தின் திரை மறைக்கப்பட்டு விடும். உலகப் பிரகாரமான பெண்களோடு நீ பேசலாம், அல்லது உலகப் பிரகாரமான மனிதர்களோடு நீ பேசலாம், அது யாராக இருந்தாலும் சரி, அவர்கள் இன்னுமாய் ஷெக்கினா மகிமையின் கீழ் வாழ்கிறார்கள், அது அவர்களுக்கு ஒரு நேசமிக்க தேவன் உண்டென்றும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்து எழுந்தார் என்றும் கூறிக் கொண்டே இருக்கும். 51. சில வாரங்களுக்கு முன்னதாக, நான் ஜெர்மனி தேசத்திலுள்ள கார்ல்ஸ்ருஹே என்ற இடத்தில் இருந்தேன். அங்கிருந்த சபையார் ஸ்விங்லி கொள்கையை உடையவர்கள்; அது லூத்தரன் சபையல்ல. ஆனால் அவர்கள்... நான் ஒரு இரவுக் கூட்டத்திற்காக உள்ளே சென்றேன். ஷரிட்ஸ் என்ற இடத்தில் பில்லி கிரஹாமும் இருந்தார். அதற்கு அடுத்த நாள் நான் அங்கு சென்றேன். நானும் பில்லி கிரஹாமும் அருகருகே உட்கார்ந்திருப்பது போல் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது. உண்மையான தேவனுடைய ஊழியக்காரர் என்ற நிலையில், பில்லி கிரஹாமிற்கு என் இருதயத்தில் ஓர் இடம் உண்டு. அவர் மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கிக்கிறார். அவர் மிகச் சிறந்த பணியைச் செய்கிறார். தேவன் அவரை பயன்படுத்துகிறார். அதை நாம் அறிவோம். அங்கே அவர் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்த நாளில் என்னால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் வந்து பிரசங்க மேடையில் அமர வேண்டும் என்பதாக எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் நான் மிகவும் களைப்புற்றவனாக, பல ஆயிரக்கணக்கான மைல்கள் தூரமுடைய நீண்ட விமானப் பயணத்தை மேற்கொண்டதனால், சரீரம் நொந்து போனவனாகக் காணப்பட்டேன். நான் அறைக்குள் சென்றேன். அங்கு படுத்து ஓய்வு எடுக்கச் சென்றேன். அங்கு தூங்குவதற்காகச் சென்றேன். காலதாமதமாகி இருந்தது. ஆகவே, அங்கு சென்று வானொலிப் பெட்டியைத் திருப்பினேன். அவர், ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு பிரசங்கிப்பதைக் கேட்டேன். 52. அதற்கடுத்த நாள் காலையில் செய்தித்தாள்கள் வந்தது. ஜனங்கள் கூடி அவருடைய கூட்டத்திற்கு மதிப்பை உண்டு பண்ணியிருந்ததை நான் பார்த்தேன். சபை அவரைப் புறக்கணித்தது. சபையின் முக்கிய அமைப்பு ஒரு போதும் அப்படிப்பட்ட ஒருவரை அவர்கள் தேசத்திற்கு அழைத்ததில்லை. அவருடைய தலைமுடியை ஒப்பனை செய்து உள்ளார் என்று அவர்கள் கூறினார்கள். அல்லது அதை அவர் பின்னல் செய்து உள்ளார் என்று கூறினார்கள். அப்படிக் கூறினார்கள். அவர் பிரசங்க பீடத்திற்கு வரும் போது, தேவனுடைய மனுஷன் என்பதற்குப் பதிலாக, ஒரு விளம்பரதாரர் போல் வருகிறார். அவருடைய வஸ்திரங்களில் கொஞ்சம் கூட சுருக்கம் கிடையாது. அவர் பிரசங்கிக்கும் போது கூச்சலிட்டு, அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு சிறந்த, துணி துவைக்கும் சோப்பை, கையை அசைத்து, ஆட்டி விளம்பரப் படுத்துவது போலிருக்கிறது. அவர் பயன்படுத்துகிற வாசனைத் திரவியத்தின் வாசனையை பத்து அடி தூரத்திற்கு அப்பால் இருந்து கூட நுகர முடியும். அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகத்தான கர்த்தத்துவத்தைக் குறித்துப் பிரசங்கித்தார். அங்கு நான் பத்து நாட்கள் இருந்தேன். அப்படியானால், நான் எதற்காக அங்கிருக்கிறேன் என்பதை அறிந்து இருந்தேன். 53. பாருங்கள், ஜூரிட்ச், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள சபைகள் இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதை விசுவாசிப்பதில்லை. அவர் யோசேப்பின் குமாரன், தன்னை தேவனுடைய குமாரன் என்று அழைத்துக் கொண்டார் என்று கூறுகிறார்கள். அது கிறிஸ்துவத்தின் அஸ்திபாரத்தையே குலுக்குகிறது. அவர் கன்னி பெற்று எடுத்த ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாக இருந்தார். பில்லி கிரஹாம் ஒரு போதும் அதை விட்டுக் கொடுக்கவில்லை. அவர் அவ்விதமாகவே பிரசங்கித்தார். ஆம், ஐயா. அவரைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று நான் அறிந்திருந்தேன். தேவனற்ற அந்த இடத்தில், தேவன் எங்களுக்கு ஒரு நல்ல காலை வேளையைத் தந்தார். ஆயிர வருட அரசாட்சி தொடங்கி விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு, தேவாலயங்களில் மணியோசை, அப்படியிருந்தும் கூட, பில்லி கிரஹாமை சலவைத் தூள் விற்பவர் என்றும், என்னைக் குறி சொல்லுகிறவன் என்றும் இழிவாய்ப் பேசினார்கள். அவர்கள் எப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களால் அறிய முடியும். 54. யோவான் மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கித்தான். கோடாரி மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது என்று முழக்கமிட்டான். அவன் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை. அவனுக்குப் பின் இயேசு வந்தார். அவர் பிரசங்கம் செய்யவில்லை. ஆனால் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தி, அற்புதங்களைச் செய்தார். வந்த யோவானை அவர்கள் பிசாசு பிடித்தவன் என்று அழைத்தார்கள்; ஏனென்றால், அவன் புசிக்கவும், குடிக்கவுமில்லை. மனுஷ குமாரனையோ அதிகமாக புசிக்கிறவனாகவும், பாவிகளின் சினேகிதனாகவும் இருக்கிறார் என்றார்கள். ஞானமானது அவளுடைய பிள்ளைகளால் நீதிக்கு உட்படுத்தப் படுகிறது. இன்று அவர்களுடைய சொந்த தேசத்தைக் கவனியுங்கள். யோவானைப் போன்று இயேசு கிறிஸ்து வருகிறார். யோவானைப் போன்று ஒரு தீர்க்கதரிசியாய் வருகிறார். பில்லி கிரஹாம் மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கிக்கிறார். அதற்குப் பிறகு ஒரு பழைய கால கூட்டம் போல, கூட்டங்கள் நடத்தி வியாதியஸ்தரைச் சுகப்படுத்தியும், தீர்க்கதரிசனங்கள் உரைத்தும், வெவ்வேறான அற்புத அடையாளங்களைச் செய்கிறார். அப்படியிருந்தும் கூட, தேவனற்ற பரிசேயர்களின் ஆவி அந்தச் சபைகளைச் சூழ்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழல். சபைகள் ஷெக்கினா மகிமையின் கீழ் இருப்பதற்குப் பதிலாக - வேறொரு சூழலில் இருக்கிறது. ஆமென். ஏதாவது நான் தவறாக கூறியிருந்தால் தேவன் என்னை மன்னிப்பாராக. நான் என்ன பொருள் கொள்கிறேன் என்பதைக் கவனித்தீர்களா-? அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள். 55. நாங்கள் கார்ல்ஸ்ருஹே என்கிற இடத்திற்குக் கடந்து சென்றோம். குளிர்ந்து போன, பாரம்பரியமிக்கவர்கள், 50,000 பேர் பலிபீடத்தில் முழங்கால் படியிட்டு, தங்கள் இருதயத்தைத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்து, பரிசுத்தாவியைப் பெற்றார்கள். நாங்கள் கார்ல்ஸ்ரூஹே என்ற இடத்திற்குக் கடந்து சென்றோம். அந்தச் சபை, “அவரை அங்கே வர அனுமதிக்காதீர்கள், (பாருங்கள்-?) அவரை அனுமதிக்காதீர்கள்'' என்று ஒரு துரித செய்தியை அனுப்பி வைத்தது. அவர்களுக்கு எந்தவொரு அரங்கமும் கிடைக்கவில்லை. ஆகவே அங்கேயுள்ள மனிதர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, பல ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட பெரிய மைதானத்தில், தார்ப்பாய்களைப் பரப்பி, ஒரு பெரிய கதீட்டரல் போல கட்டி முடித்தார்கள். முதல்நாள் இரவுக் கூட்டத்திற்கே பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்து குவிந்தார்கள். ஜெர்மனியிலிருந்து ஒவ்வொரு இரவும் 200 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு ஜனங்கள் வந்தார்கள். ஜெர்மன் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளிலிருந்து ஜூரிட்ஜ் கூட்டங்களுக்கு வந்தார்கள். நாங்கள்... அங்கு துரிதமாகச் சென்றோம். நாங்கள் அங்கே இருந்த போது... முனைவர் குக்கன்புல் என்னும் என்னுடைய பிரதிநிதி அங்கே இருந்தார். “இல்லை, அவர் இங்கு வர முடியாது என்று காவலர்கள் கூறினார்கள்” என்று அவரிடத்தில் கூறினார்கள். “உங்களுக்கு பில்லி கிரஹாம் இருந்தார். அவரைக் குறித்து என்ன-?” என்று கேட்டார்கள். “அவரை சபைக்கு வரவிடக்கூடாது என்ற உத்தரவை நாங்கள் பெற்றுள்ளோம்” என்று கூறினார்கள். சபை மாநிலத்தையே தன்னுடைய ஆளுகைக்குள் வைத்திருக்கும் நீங்கள் ஜூரிட்ஜ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி இவைகளில் ஏதாவது ஒரு நாட்டில் இருப்பீர்கள் என்றால், சபையும் தேசமும் ஒருங்கிணைந்து, சபை தேசத்தை தனது ஆளுகைக்குள் வைத்து, இப்படி சபையும், தேசமும் ஒருங்கிணைந்திருக்கும். ஆகவே நாம் ஒன்றும் அங்கே கிரியை செய்ய முடியாது. முனைவர் குக்கன்புல் வெளியே சென்று, “தேவனே அவ்விதமாக இருக்கக் கூடாது” என்று ஜெபித்தார். “நீர் சகோ.பிரன்ஹாமை இங்கே வழி நடத்தாவிட்டால் அவர் இங்கே வர முடியாது; ஆகவே, ஏதோவொன்று சம்பவிக்க வேண்டும், தேவனே" என்று முறையிட்டார். நான் சற்று ஓய்வு எடுத்தவனாக இருந்தேன். “ஆம், நான் ஜெர்மனிக்குப் போக வேண்டும் என்று தேவன் பேசினார்” என்று கூறினேன். "தேவனே, ஏதோ தவறு நடந்திருக்கிறது” என்று அவர் கூறினார். 56. தரிசனங்கள் கிடையாது, ஒரு சத்தமும் இல்லை, அப்படிப்பட்ட சூழலில், அவர் ஆத்துமாவின் ஆழத்தில் ஏதோவொன்று “இது அமெரிக்க மண்டலம்; அமெரிக்க தலைமை அகத்திற்குச் செல் என்று சொல்லிற்று. அங்குள்ள மேஜரிடத்தில் சென்றார்.... அவர் உள்ளே சென்று, “மேஜர் அவர்களே, நான் முனைவர் குக்கன்புல், சுவிட்சர்லாந்திலுள்ள ஜூரிட்ஜ் என்ற இடத்திலிருந்து வருகிறேன்” என்று கூறினார். அவர் அதிகாரமிக்கவர்; தேசம் அனைத்தும் அவரை அறியும். அப்படிப்பட்ட, தேசத்திற்காக உண்மையும் உத்தமமுள்ளவராக இருந்தார். “அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு சகோதரன் இருக்கிறார்; அவர் எங்களுக்காக பிரசங்கம் செய்ய வந்திருக்கிறார்" என்று கூறினார். "ஒரு பெரிய கதீட்ரல் போன்ற அரங்கத்தை அவருக்காகக் கட்டியுள்ளோம்” என்று சொன்னார். மேலே ஹம்பர்க் என்ற இடத்திலுள்ள அரங்கத்தில் அக்கூட்டத்தை நடத்துவதாக இருந்தோம். ஆனால் அங்கு மழை அதிகமாக இருக்கிறது. ஆகவே கார்ல்ஸ்ருஹே என்ற இடத்திற்கு அதை மாற்றியுள்ளோம். (கார்ல்ஸ்ருஹே என்றால் “கார்ல்ஸின் ஓய்வு” என்று பொருள்.) இப்போது அவரை இங்கே அழைத்து வந்து உள்ளோம். அவர் இங்கே வர வேண்டும் என்று விரும்புகிறார். எங்களுடைய சகோதரன் வருவதற்கு, அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை நாங்கள் பெற்றுக் கொள்வதற்கும், அவர் வருவதை தடை செய்கின்றனர்” என்று கூறினார். “அவர்கள் ஏற்கனவே பில்லி கிரஹாமை அழைத்து கூட்டங்களை நடத்தினார்கள்'' என்றும் கூறினார். அவர் வருவதற்கு அனுமதி அளித்தனர். இப்போது எங்களுடைய சகோதரன் வந்தால் அவர்களுக்கென்ன-?” என்று கேட்டார். அதற்கு அவர், “நல்லது, திரு.கிரஹாமை அனுமதித்தார்களானால், அவர்கள் உங்களுடைய சகோதரன் வருவதையும் அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார். உண்மையாகவே, அது அமெரிக்க ஆதிக்கத்திலிருக்கிறது. ஆகவே, அவர், “நல்லது, நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர் வருவதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார். 57. “உங்களுடைய பிரசங்கி வருவதால், அவருக்கு விரோதமாக இவர்கள் இடத்தில் என்ன இருக்கிறது-?” என்றார். "அவர்களுக்கென்ன... அவர் வருவதை ஏன் இவர்கள் விரும்பவில்லை-?'' “நல்லது, ஐயா" என்றார். “ஏனென்றால், எங்களுடைய சகோதரன் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறார்; ஜெபித்து அதன் பலனைக் காண்கிறார்; அவர்கள் இயற்கைக்கு மேம்பட்ட உன்னதமான தேவனுக்கு விரோதமாக கிரியை நடப்பிக்கிறார்கள். அது தான் காரணம்” என்று கூறினார். “உங்களுடைய அந்த சகோதரன் பெயர் என்ன-?” என்று கேட்டார். “சகோ.பிரன்ஹாம்” என்று பதிலளித்தார். “சகோ.பிரன்ஹாமா-?” என்று அவர் கேட்டார். "அவர் என்னுடைய தாயாருக்காக ஜெபித்தார். வர்ஜீனியாவில், அவர்கள் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் இருந்து, சுகமாக்கப்பட்டவர்களாக வெளியே எடுக்கப்பட்டார்கள்" என்று கூறினார். “கதவு திறந்து இருக்கிறது என்று அவருக்குச் சொல்லுங்கள். அவரை வரச் சொல்லுங்கள்” என்று கூறினார். “அது மட்டுமல்ல, இராணுவ மைதானம் திறந்து விடப்படும். நாங்களும் அங்கு வருவோம்” என்று கூறினார். தேவன், அவர் இன்னுமாய் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். நிச்சயமாக. தேவனுடைய வழி நடத்துதலை நீங்கள் உணரும் போது, அதன்படியே முன்னேறிச் செல்லுங்கள். அவர் வழி நடத்தும் அந்த சூழலுக்குள் சென்று, அதையே பின் தொடருங்கள். அது கிழக்கே சென்றாலும் சரி அல்லது மேற்கே சென்றாலும் சரி, முன்னேறிச் செல்லுங்கள். முதல் நாள் இரவில், ஒரு கூட்டம் கம்யூனிஸ்டுகள், அந்த இடத்திற்கு வெளியே வந்து, கூட்டத்தின் மத்தியில் போராட்டம் நடத்தி கூட்டத்தினரைத் தள்ளிக் கொண்டு என்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். நாங்கள் வெளியே சென்ற போது, ஜெர்மானிய தேசத்து இராணுவ வீரர்கள் தங்கள் கடமையில் உத்தமமாயிருந்து, உயிரையும் பணயம் வைத்து, என்னைச் சுற்றிலும் அவர்கள் ஆயுதம் தாங்கியவர்களாய், என்னைச் சுற்றி பல அடுக்கு அரண்களை ஏற்படுத்தினார்கள். நான் வாகனத்திற்குள் ஏறுமட்டுமாய் அப்படி சூழ்ந்து கொண்டார்கள். ஒரு பைத்தியக்காரன், என் மகன் பில்லியை மோட்டார் வாகனத்திற்குள் ஏறுவதற்கு முன்பாகப் பிடித்துக் கொண்டான். 58. அடுத்த நாள் இரவில், அந்தக் கட்டிடத்தில் நின்று கொண்டிருக்கும் போது, அங்கே பரிசுத்த ஆவியானவர் அசைவாடினார். கூட்டத்தில் இருந்தவர்களை நான் ஜெர்மானியப் பெயரை உச்சரித்து அழைக்கக் கூடிய அளவிற்கு, அதை உச்சரிக்கவும், அவர்களுக்கு சொல்லவும் முடிந்தது. பரிசுத்த ஆவியானவர் என்னில் கிரியை செய்வதை அவர்கள் கண்டார்கள். அங்கே ஒரு மாந்திரீகன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்கள் என்னையே நோக்கிக் கொண்டு இருந்தன. “நான் அங்கே வருகிறேன்” என்று கூறினான். “என்னை யார் என்று அவரை அறியச் செய்கிறேன்'' என்றான். அந்த நாளில், “நான் வானத்திலிருந்து புயல் காற்றை வரவழைப்பேன்" என்று அவர்களிடத்தில் கூறினான். “இந்த இடத்தை நொறுக்கிக் கிழித்து, கீழே தள்ளுவேன்'' என்று கூறினான். இடி முழங்கிற்று. மின்னல் எவ்வளவு பலமாக அடிக்க முடியுமோ, அவ்வாறு அடித்து, ஒளிப்பிளம்புகள் உண்டாயின. அவன் இங்கே வந்தான். எழுத்துப் பூர்வமான ஒரு பயமுறுத்துதலை உண்டு பண்ணினான். நான் திரும்பிப் பார்த்த போது,... அவன் என்ன கூறினானோ, அது எனக்கு ஒரு காரியமே கிடையாது. அந்தப் புயல் வருவதைப் பார்த்த போது, ஜனங்கள் நடுங்க ஆரம்பித்தார்கள். ஒரு பயங்கர சத்தத்துடன் இடியும் மின்னலும் உண்டானது. அதைத் தொடர்ந்து இன்னொரு பலத்த மின்னல் வந்தது. நான் சுற்றிலும் கவனித்தேன். அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தேன். “பிசாசின் மகனே, உன்னால் அற்புதங்களைச் செய்ய முடியும். அது சரியா-? உன்னுடைய முகத்திரையை இங்கே கிழித்துப் போடுகிறேன்'' என்று கூறினேன். “யம்பிரே மற்றும் யந்நே போன்றோர், மோசேயை எதிர்த்து நின்றார்கள்” என்று வேதம் கூறுகிறது. இதுவும் அது போன்றது தான். அந்திக் கிறிஸ்துவும் அற்புதங்களைச் செய்வதற்கு வல்லமை பெற்றுள்ளான். ஆனால் நீயோ, இயற்கைக்கு மேம்பட்ட தேவனைத் தொடுவதற்குப் பயப்படுகிறாய். சரியா. “நீ இதைச் செய்கிறபடியால், அதற்கு நீ திரும்ப செலுத்த வேண்டும். அந்த இரவில் அப்போதே அவனை முடவனாக அங்கிருந்து அகற்றினார்கள். நாங்கள் அங்கிருக்கும் போதே, புயல் கடந்து சென்றது. என் உடைய செய்தியைத் தொடர்ந்தேன். என் இதயத்தில் தேவனை அழைத்துக் கொண்டு இருப்பதை இருத்தி வைத்தேன். சிறிது நேரம் கழித்து, பத்து நிமிடத்திற்குள் புயல் முழுக்கக் கடந்து விட்டது. உண்மையான சௌந்தரியத்துடன் அவள் பிரகாசித்தாள். ஏன்-?... கர்த்தராகிய இயேசு... தேவனுடைய மகிமை அசைவாடத் தொடங்கினதை ஜனங்கள் பார்த்த போது, அந்த தேவனுடைய மகிமையின் தன்மைக்குள் பிரவேசித்தார்கள். 59. அவர்கள் ஜெப வரிசையைத் தொடங்கின போது, ஜெபத்திற்காக வியாதியஸ்தரைத் தூக்கிக் கொண்டு மேடைக்கு வந்தார்கள். இதை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. ஒரு சிறு பெண்ணை அவர்கள் மேடைக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவளை நான் ஒரு போதும் கவனிக்கவில்லை. என்னுடைய மொழிபெயர்ப்பாளரோடு பேசிக் கொண்டிருந்தேன். அந்த இரவில் அது சிறந்த ஒன்றாக இருந்தது. அமெரிக்காவில் பிறந்த ஜெர்மானிய பெண் அவள். நான் சுற்று முற்றுமாய் திரும்பி, “ஐயா, சற்று பாருங்கள்” என்றேன். "நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஒன்று கூட ஒளி மழுங்கவில்லை” “அவனைக் கவனியுங்கள். தலை கவிழ்ந்து அவன் உட்கார்ந்திருக்கும் தன்மையைப் பாருங்கள். தலை குனிந்தவனாய் அமர்ந்திருக்கிறான். கைகளை இவ்விதமாக மடக்கி வைத்திருக்கிறான்” என்றேன். “அவனுக்கு ஏதோ சம்பவித்துள்ளது” என்று கூறினேன். அதே சமயத்தில், சுற்று முற்றுமாய்ப் பார்த்தேன். யாரோ ஒருவர் கூச்சலிட்டு கதறும் சத்தத்தைக் கேட்டேன். அது என்ன என்று அதிசயித்தேன். இவ்வளவு உயரமுள்ள அந்தச் சிறிய ஜெர்மானியப் பெண்ணை அங்கே உட்கார வைத்தார்கள். பார்ப்பதற்கு அழகுள்ள சிறு பெண். அவளுடைய சடை முதுகுப்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும். அமெரிக்கர்களாகிய நாம், ஜெர்மானியர்களோடு சண்டையிட்டோம். அவர்களைக் குறித்து தவறான எண்ணம் கொண்டு உள்ளோம். உண்மையிலேயே மறுபடியும் பிறந்த ஜெர்மானியப் பிள்ளைகள், உலகத்தின் எவ்விடத்திலும் உள்ள எல்லாரைக் காட்டிலும் இனிமையும் அன்புள்ளவர்களாயும் இருக்கின்றனர். 60. ''அதைக் குறித்து விரிவாக ஒரு விசாரணையை மேற்கொண்டேன்” என்று ஒரு ஊழியக்காரர் கூறினார். “நான் மலை மேல் ஏறிச் சென்றேன். அவர்கள், “மரணமோ அல்லது ஜீவனோ, அங்கே போக வேண்டுமானால், அங்கு பொருத்தப்பட்டுள்ள எல்லா இயந்திரத் துப்பாக்கிகளின் வலைகளைத் தகர்த்துக் கொண்டு போக வேண்டும்” என்று சொன்னார்கள். "அதிலிருந்து குண்டுகள் வராமல் சற்று நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்றும் கூறினார்கள். அவர் கரங்கள் என்னைத் தழுவிக் கொண்டன. அவர் ஒரு ஜெர்மானிய பிரசங்கியார். காலாட்படையில் அவர் ஒரு நாஜியாக இருந்தவர். இப்போது இருக்கிற யுத்த வீரர்களாகிய உங்களைப் போல் அல்ல; அவர் எஸ்.எஸ். படையைச் சேர்ந்தவர். இவர் ஒரு சாதாரண ஜெர்மானியப் போர் வீரர். அவர் மிகவும் தெளிவாக அவைகளை விசாரணை செய்து கண்டறிந்தார். அவர் அங்கே அந்த மலையின் மீது சென்ற போது, “சகோ. பிரன்ஹாம், அங்கே மேலே நோக்கிப் பார்த்தேன்; மிகவும் இரகசியமாக எட்டிப் பார்த்தேன்; ஏனென்றால், எந்த நிமிடத்திலும் நான் சுட்டுக் கொல்லப்படலாம் என எதிர்பார்த்தேன்” என்று கூறினார். “அங்கு என்ன பார்த்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா-?” என்று கேட்டார். ஒரு கூட்டம் அமெரிக்கப் பையன்கள், சுற்றிலும் இயந்திரத் துப்பாக்கிகள் இருக்க, இவர்களோ முழங்கால் படியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முழங்கால்களுக்கு முன்பாக வேதாகமம் விரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது” என்றார். “88 மில்லி மீட்டர் துப்பாக்கிகளை இயக்க பயிற்சி பெற்றிருந்தார்கள். அது இயக்கப்படுவதற்கு முன்பாக, கையெறி வெடிகுண்டுகள் வீசப்படும். இரண்டும் ஒரே சமயத்தில் சம்பவிக்கும். அவர்கள் சரீரம் சிதறடிக்கப் பட்டுப்போம். ஆகவே, என்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கொண்டேன். அங்கே காற்றில் மேலே மேலே ஏறிச் சென்றேன். இதயம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு சடுதியாய் பின்னோக்கி வர முடியுமோ, அவ்வளவு துரிதமாய் பின்னோக்கி வந்தேன். நான் அவர்களை சென்றடைந்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இயந்திரத் துப்பாக்கி சூழ்ந்திருக்கும் வலைப்பக்கமாக சென்றார்கள்” என்று கூறினார். ஏன்-? ஒருவரைக் குறித்து ஒருவர் அவ்விதமாக எண்ணும் எண்ணத்தை அந்த யுத்த வீரர்கள் பெற்று இருப்பார்களானால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் குறித்த காரியம் என்ன-? புருஷர்களும், ஸ்திரீகளும் அப்படிப்பட்ட தன்மைக்குள் (சூழலுக்குள்) வருவார்களானால், தேசங்களும் அப்படிப்பட்ட, உயிர்த்தெழுந்து ஜீவிக்கிற தேவனுடைய பிரசன்னத்தில் வருவார்களானால், நித்திய நித்தியமாக யுத்தங்கள் ஓய்ந்து போகும். அந்த மனிதன் பிரசங்க பீடத்தில் என்னோடு இருந்தார். ஆராதனை முடிந்த பின், நாங்கள் இருவரும் மதிய உணவு உட்கொண்டோம். அப்போது இருவரும் எங்கள் கரங்களை ஒருவர் மீது ஒருவராய்ப் போட்டுத் தழுவிக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு அமெரிக்கன் இருந்தார். அவர் ஒரு இராணுவ வீரராக இருந்தவர். சில வருடங்களுக்கு முன்பாக, அரசியல் காரணமாக ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டார்கள். இப்போதோ, அவர்கள் கரங்கள் ஒருவர் மீது ஒருவர் போட்டுத் தழுவிக் கொண்டவர்களாக இருந்தார்கள். சகோதரர்களே, அதைச் செய்தது மற்றொன்றால் விளைந்தது. அதன் தாக்கம் ஒவ்வொருவரையும் மனிதர்களாக மாற்றியது. 61. அந்த இரவில், அந்தச் சிறிய ஜெர்மானியப் பெண், சிறிய அழகிய வஸ்திரத்தை அணிந்திருந்தாள். சிறிய வெள்ளை மலர் முகம். அவளை ஒரு போதும் பார்த்ததில்லை. அவள் கதறித் துடிக்கும் சத்தத்தைக் கேட்டேன். நான் நடந்து, இப்பக்கமாகத் திரும்பினேன். அவளை என்னிடத்தில் கொண்டு வருவதற்கு ஒருவர் கூட முயற்சிக்கவில்லை. அந்த தேசத்தில் அவர்களுடைய மொழியைப் பேசி, ஜெப அட்டைகளைக் கொடுக்கத்தக்கதான ஒரு மனுஷனை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அவன் அப்படிப்பட்ட பயிற்சியைப் பெறாததால் அந்த சிறு பெண்ணை நடக்க விடுவதற்குப் பதிலாக அவளைத் தூக்கி மேடையில் விட்டு விட்டான். மேடையில் வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவது நபராக இருந்தாள். அவளைக் கவனித்தேன். மேடையின் அருகாமையில் வந்து விட்டாள். மேடையோ மிகவும் உயரமாக இருந்தது. மேடைக்கு வருவதற்கு, அவள் அநேகப் படிக்கட்டுகள் ஏற வேண்டும். நான் அவளைக் கவனித்த போது, அவள் தூரத்தில் இருந்தாள். அவளிடத்தில் சென்று, இவ்விதமாக அவளை நான் தூக்கிக் கொண்டேன். மொழிபெயர்ப்பாளர் அவளிடத்தில் பேச ஆரம்பித்தார். அவளால் பேச முடியவில்லை, அவள் நாவு கட்டப்பட்டிருந்தது. ''எனக்காக ஜெபிக்க இருக்கும் அந்த மனிதனை நான் சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறினாள். குருட்டுத்தனமான அவ்வளவு விசுவாசம். “உன்னைக் கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறாரே, அவர் தான் உனக்காக ஜெபிக்கப் போகிறவர்” என்று மொழி பெயர்ப்பாளர் கூறினார். அன்றைய தினத்தில் இதே ஆடையைத் தான் அணிந்திருந்தேன். இது ஆறு வருடங்களுக்கு முன் ஓஸ்லோ என்ற இடத்தில் வைத்து எனக்குக் கொடுக்கப்பட்டது. ஆகவே அவள் இவ்விதமாக தன் கரத்தை என் மீது போட்டாள். அவள் தலையை என் தோள் மீது சாய்த்துக் கொண்டாள். “என்னுடைய சிறிய பெக்கியைப் போல் இருக்கிறாள்” என்று எண்ணிக் கொண்டேன். அவளின் அந்தச் சிறிய சடையை சற்று தட்டி விட்டேன். “எளிய சிறிய பெண்” என்று எண்ணினேன். சிறிய குழந்தையைப் போல, என் மார்பை பிரண்டுவதைப் பார்த்தேன். அவள் தலையைப் பிடித்து சற்று நிமிர்த்தினேன். அவளுடைய கண்கள் வெளிறிப் போயிருந்தது. அவளுடைய சிறிய முகத்தைப் பார்த்தேன். பின்பக்கமாக என் கரங்களில் சாய்ந்து கொண்டிருந்தாள். 62. அங்கே, தேவனுடைய கிருபையில், ஒரு தரிசனம் உண்டாயிற்று. அந்தச் சிறு பெண், தன் தாயின் கரங்களில் படுத்திருக்கிறாள், அவளுடைய மருத்துவர் அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவள் பிறவியிலேயே குருடாய்ப் பிறந்தாள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவளுடைய தாயார் மிக ஒல்லியானவர், உயரமும் அதிகம்; தலைமுடியை முடிந்து போட்டு இருந்தாள். அவளுடைய தகப்பனாரைப் பார்த்தேன். குள்ளமானவர். பருமனாகக் காணப்பட்டார். அவருடைய முடி கறுப்பாயிருந்தது. அவர்கள் இருக்கிற அந்த இடத்தில், பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தரிசனம் அவ்வாறு இருந்தது. அவளுடைய தாயார், கூட்டத்தோடு கூட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவளுடைய தகப்பனார், ஆயிரம் ஆயிரமான ஜனங்கள் அமர்ந்திருந்த இடத்தில், மிகவும் பின்னால் உட்கார்ந்திருந்தார். நான் பின்னால் பார்த்த போது, “உண்மையாகவே எனக்குள் எந்த வல்லமையுமில்லை” என்று சொல்லிக் கொண்டேன். அது என்னவாக இருந்தது-? அங்கே ஒரு சூழல் (தெய்வீகத் தன்மை) உருவாயிற்று. அந்தக் காரியங்களை ஏற்படுத்தியது ஷெக்கினா மகிமையே. நான் கவனித்தேன். அந்தச் சிறு பெண்ணை விட்டு ஒரு நிழல் அசைந்து போவதைக் கண்டேன். அவள் தன்னுடைய கரங்களை உயர்த்திக் கொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். பேசினாள். சில பொருட்களைச் சுட்டிக் காட்டினாள். பரலோகத்தின் தேவன் ஜீவிக்கிறார், ஆளுகை செய்கிறார் என்பதை நான் அறிவேன். என் பக்கமாக அவளை இழுத்தேன். அவளுக்காக ஜெபித்தேன். அவளைத் தூக்கிப் பிடித்தேன். ஜெபித்தேன். அவள் என்னை நோக்கிப் பார்த்தாள். அவளுடைய சிறிய கண்கள் படபடத்தன; ஒளி வீசிற்று. அவள் எதையோ சொல்ல முனைந்தாள். மொழி பெயர்ப்பாளர் கீழே நோக்கிப் பார்த்தார்; “சகோதரன் பிரன்ஹாமே, இப்போது அவளால் பார்க்க முடிகிறது” என்று கூறினார். கொஞ்ச நேரத்திற்கு அதை வெளியில் சொல்லாதீர்கள். உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினேன். “அவள் என்ன கூறுகிறாள்-?” என்று கேட்டேன். அவைகள் என்ன-? - அங்கிருக்கும் அந்தப் பொருட்கள் எல்லாம் என்ன-?” என்று அவள் கேட்கிறாள்” என்று கூறினார். அவைகள் எல்லாம் ஒளி விடும் விளக்குகளாக இருந்தன. அதை மொழி பெயர்ப்பாளர் கேட்ட போது... அவள், அவளுடைய தாயாரை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவள் பேசும் சத்தத்தை அவளுடைய தாயாரும் அங்கிருந்த மற்றவர்களும் கேட்டனர். அவள் மேலே நோக்கிப் பார்த்தாள். சத்தமிட்டு அழுதாள். அவளுடைய தாயார் மிகவும் பிரமிப்பு அடைந்தார்கள்... பரலோகத்தின் மகிமை, அந்தத் தெய்வீக சூழல் கட்டிடத்தை நிரப்பியது. பிசாசு பக்கவாதம் கொண்டவனைப் போல நிலைகுலைந்து போனான். ஒரு வல்லமை. தேவனுடைய பிரசன்னத்தின் தாக்கம். அவளுடைய தாயார் சத்தமிட்டு அலறிக் கொண்டு, வேகமாக ஓடினார்கள். அவளுடைய பாதரட்சைகள் அவிழ்ந்து விழும் அளவுக்கு அவளுடைய ஓட்டத்தில் வேகம் இருந்தது. அவர்கள் எல்லாரும் அவளுக்குப் பின்னாக ஓடினார்கள். அவள் மேடைக்கு ஓடினாள்; தன்னுடைய கரங்களை அவளுடைய குழந்தையின் மீது போட்டுத் தழுவிக் கொண்டாள். அந்தக் குழந்தை, “நீ என்னுடைய அம்மாவா-?” என்று பேசிற்று. முதன் முதலாக தன் தாயை அவள் பார்க்கிறாள். "ஓ, அம்மா, நீ மிகவும் அழகுள்ளவள். அம்மா நீயோ மிகவும் அழகுள்ளவள்” என்று அந்தக் குழந்தை பேசினாள். 63. அடுத்த நாள் காலையில், சர்வவல்லமை உள்ள தேவன், தன்னுடைய முடிவற்ற வல்லமையினால், அந்த ஜெர்மானிய சபை கீழே இறங்கி வந்த போது, அவர்கள், "சகோதரன் பிரன்ஹாம், நாங்கள் இப்போது புரிந்து கொண்டோம்; உம்முடைய இறையியல் கோட்பாட்டை நாங்கள் விசுவாசிக்கிறோம்; பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த உம்முடைய போதனை அதிசயிக்கத்தக்கது” என்று கூறினார்கள். ஆனால், “அந்த ஒளி, அந்த தூதன், இவைகளை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார்கள். அவர்கள் 600 ஊழியக்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்து காலை உணவை உட்கொண்டார்கள், அவர்கள் ஒரு பெரிய ஜெர்மன் கேமராவை அங்கே வைத்தார்கள், அதே அக்கினி ஸ்தம்பத்தில் உள்ள பரிசுத்தாவி கீழே இறங்கி, அன்று காலை ஜெர்மன் கேமராவில் மூன்று முறை எடுக்கப்பட்டு ஜெர்மனியை சுற்றிலும் சூழல் மாறியது. அது சரி. நான் யோசித்து என்னுடன் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த மாதம் கிரிஸ்துவ வணிகர்கள் கூட்டம் இருந்தது, அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு, மாறாக. அது என்ன-? இது சூழ்நிலை. ஆண்களும் பெண்களும் அந்தச் சூழலில் வாழவேண்டும். சில சாதாரண உலகில் இருக்கும் செல்வாக்கின் கீழ் இருந்து வெளியேற வேண்டாம், ஆனால் கர்த்தராகிய இயேசுவின் சூழ்நிலையில் இருங்கள். 64. ஆண்களும் பெண்களும் தலை தாழ்ந்த நிலையில், ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் சிறுமிகளும் அவர் முன்னிலையில் இருக்கும் போது நாம் ஒரு கணம் தலை வணங்கலாமா-? மூளையின் செல்லின் உச்சியில் அமைந்திருக்கும் அந்தச் சிறிய நெம்புகோலைத் திருப்பி, அந்த எண்ணங்களை எல்லாம் முட்டாள்தனமாக உங்கள் காதுகளின் வழியாகப் புறக்கணிக்கவும். பின்னர் மனித இதயம் வரை இயங்கும் அந்த சிறிய வால்வை உங்கள் ஆத்துமாவிற்கு திறக்கவும். அது காரணம் சொல்லாது; அது நம்பும். அது கடவுளின் வார்த்தை சரியானது என்றும் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் சொல்லும். 65 நித்தியம் ஏற்படுவதற்கு முன் வாழ்ந்த மகா யெகோவா தேவனே, நீ தகப்பனில்லாமல், தாயின்றி, நாட்களின் ஆரம்பம் அல்லது ஆண்டுகள் முடிவடையாமல், இந்த பரிசுத்த புஸ்தகத்தின் பக்கங்களில் வாசித்து, முற்காலத்தில் நீ செய்த காரியங்களை எப்படிக் கடந்து போனாய், இந்த இருண்ட யுகத்தில் உலகத்தின் முடிவில் வாழும் பாக்கியத்தைப் பெற்றாய். நீங்கள் மீண்டும் களத்தில் எழுந்திருப்பதைக் காண, யூகம் இல்லை, மனிதனால் உருவாக்கப் பட்ட இறையியல் இல்லை, ஒரு தேவாலயத்தில் சேருவது அல்லது ஒரு காகிதத்தில் கையெழுத்திடுவது போன்ற குளிர்ந்த சூழல் இல்லை, ஆனால் ஷெகினா மகிமையிலும் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் செல்வாக்கிலும் வாழ்ந்து, அவரது வார்த்தையை உறுதிப்படுத்தி, நிறைவேற்றி, அவர் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றுகிறார்... இரக்கமுள்ள பிதாவே, இந்த நேரத்தை உமது மகத்தான கிருபையால், இந்த ஜனங்களுக்கு தேவையானதைச் செய்வீர்கள் என்று நான் இன்று இந்த ஜனங்களை உமக்கு சமர்ப்பிக்கிறேன். பாவியைக் காப்பாற்று; பின்மாற்றக்காரர்களை மனந்திரும்ப அழைக்கவும். நோயாளிகளை குணப்படுத்துங்கள்; கர்த்தாவே, உமக்குத் தேவைப் படுவோருக்கு அவ்வாறான அனுபவத்தைக் கொடுங்கள். பிதாவே, உம்மை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்று நான் இந்தக் கூட்டத்தாரைக் கேட்டுக் கொண்டு இருக்கையில், உமது ஆவியானவர் ஜனங்கள் மீது பாய்ந்து அவர்களுக்குத் தேவையானவற்றைத் தனிப்பட்ட முறையில் வழங்குவாராக. மரித்தோரிலிருந்து உயிர்த்து எழுப்பப்பட்டவரோடு நாம் தங்கியிருக்கும் போது, பிதாவாகிய தேவனை அவருடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம், அவர், "நீங்கள் என் நாமத்தினாலே பிதாவிடம் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்" என்றார். இது ஒரு கட்டுக்கதை அல்ல, இது மனிதனின் மகிமைக்காக அல்ல. இது உமது மகிமைக்காகவும், இந்தச் சமூகத்தில் உள்ள சிறு பணிப் பெண்களையும், சிறு சிறுவர், சிறுமியரையும் வளர்ப்பதற்காகவும், கிலயாத்தில் ஒரு தைலம் இருக்கிறது என்று நோயுற்றவர்களுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் சொல்லக் கூடியதாக இருக்கிறது. பிதாவே, இயேசுவின் நிமித்தம் அதை அருளுவீராக. நீங்கள் தலை தாழ்ந்து நிற்கும் போது, நீங்கள் நோய் வாய்ப்பட்டிருந்தால், உங்கள் குணப்படுத்தலுக்காக இப்போது அவரைப் பாருங்கள். உங்களுக்கு இரட்சிப்பு தேவைப்பட்டால், நாம் தேவனோடு இருக்கும் போது இரட்சிப்பிற்காக இப்போது அவரைத் தேடுங்கள், போதகர் ஜெபத்தில் தொடர்ந்து வழிநடத்துவாரா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். *******